இன்றைய ராசிபலன்: இன்று இந்த ராசிகளுக்கு பொற்காலம், முழு ராசிபலன் இதோ

தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? டிசம்பர் 13, 2023க்கான மேஷம், சிம்மம் மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 14, 2023, 05:36 AM IST
  • வேலையில் மேலதிகாரிகளின் நெருக்கடிகளால் மனஉளைச்சல் அதிகமாகும்.
  • பூர்வீக சொத்துக்கள் வழியில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
  • செலவுகள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
இன்றைய ராசிபலன்: இன்று இந்த ராசிகளுக்கு பொற்காலம், முழு ராசிபலன் இதோ title=

 அனைத்து இராசி அறிகுறிகளும் ஒருவரின் ஆளுமையை வரையறுக்கும் அவற்றின் சொந்த குணாதிசயங்கள் மற்றும் பண்புகளைக் கொண்டுள்ளன. உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு உங்கள் நாளைத் தொடங்கினால் அது உதவியாக இருக்கும் அல்லவா? இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

மேஷம்

இன்று எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை நிலவும். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்

இன்று பொருளாதார ரிதீயாக நெருக்கடி ஏற்படலாம். நெருங்கியவர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மேலும் படிக்க | அனுமனின் ஆசிர்வாதத்தில் இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல நேரம்!

கடகம்

இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வருமானம் பெருகும்.

சிம்மம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும்.

கன்னி

இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி இருக்கும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

துலாம்

இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். எடுக்கும் முயற்சிகளில் முடிந்த வரை பொறுமையுடன் இருப்பது நல்லது. உறவினர்கள் வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும்.

விருச்சிகம்

இன்று வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். செலவுகள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

தனுசு

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சினை தீரும். சுபகாரியங்கள் கைகூடும்.

மகரம்

இன்று வீண் செலவுகளால் பணப்பிரச்சினை ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியான புதிய முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கும்பம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். வேலையில் மேலதிகாரிகளின் நெருக்கடிகளால் மனஉளைச்சல் அதிகமாகும். பேச்சில் நிதானம் தேவை.

மீனம்

இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துக்கள் வழியில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

மேலும் படிக்க | 30 ஆண்டுக்குப் பின் சனி ஆட்டம்.. இந்த ராசிகளுக்கு உச்ச ராஜயோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News