மே 10 வரை இந்த 4 ராசிகளின் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும், கவனம் தேவை

Budh Ast 2023: அஸ்தமன நிலையில் இருக்கும் புதன் மே 10 ஆம் தேதி மேஷ ராசியில் உதயமாகவுள்ளார். இப்போது மேஷ ராசியில் அஸ்தமனமாகியுள்ள புதனால் எந்தெந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 25, 2023, 04:50 PM IST
  • அஸ்தமன நிலையில் இருக்கும் புதன்.
  • மே 10 ஆம் தேதி மேஷ ராசியில் உதயமாகவுள்ளார்.
  • எந்தெந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மே 10 வரை இந்த 4 ராசிகளின் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும், கவனம் தேவை title=

ஜோதிட சாஸ்திரத்தின் படி, வியாபாரம், கல்வி, புத்திசாலித்தனம், பேச்சு, எழுத்து ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். நவகிரகங்களில் புதன் வேகமாக ராசியை மாற்றுபவர். மேலும் புதன் அவ்வப்போது ஒரு ராசியில் பயணிக்கும் போது அஸ்தமனமாகி, உதயமாவார். அதன்படி புதன் 2023 ஏப்ரல் 23 ம் தேதி மேஷ ராசியில் அஸ்தமனமானார். மேலும் அஸ்தமன நிலையில் இருக்கும் புதன் மே 10 ஆம் தேதி மேஷ ராசியில் உதயமாகவுள்ளார். மேஷத்தின் ஆறாம் மற்றும் மூன்றாம் வீட்டிற்கு அதிபதியான புதன் அமைவது பல ராசிகளில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். இதன் போது இந்த ராசிக்காரர்கள் மன உளைச்சலுடன் பண நெருக்கடியையும் சந்திக்க நேரிடும். புதன் அஸ்தமனத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்-

தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சவாலானதாக இருக்கும். இந்த நேரம் வியாபாரிகளுக்கு கடினமாக இருக்கும். கூட்டாண்மையில் பணிபுரியும் இந்த ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வருமானம் குறையலாம். குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். மன உளைச்சலுக்கு ஆளாகலாம்.

மேலும் படிக்க | 36 ஆண்டுக்கு பிறகு குரு-ராகு சேர்க்கை: இந்த ராசிகளுக்கு ஜாக்கிரதை

கன்னி - இந்த காலம் கன்னி ராசிக்காரர்களுக்கு வேதனையாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் சிறிய ஆதரவைப் பெறுவீர்கள். மன பிரச்சனைகள் அதிகரிக்கலாம். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கலாம். செலவுகள் அதிகரிப்பதால் பொருளாதார வரவு-செலவுத் திட்டம் அசைக்கப்படலாம், எனவே பட்ஜெட்டை உருவாக்கி முன்னேறுங்கள்.

கடகம் - கடக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் எதிர்மறையான பலன்களைப் பெறலாம். இந்த நேரத்தில் பல நல்ல வாய்ப்புகள் நழுவிப் போகலாம். சிலருக்கு இந்த நேரத்தில் உத்தியோகத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நஷ்டம் வரலாம்.

மேஷம்- இந்த நேரத்தில் உங்களுக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். இருந்தாலும் சிலருக்கு வேலையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற மாட்டீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Venus Transit: மிதுன ராசிக்கு பெயரும் சுக்கிரன்! வாழ்க்கையை வளமாக்க பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News