Sani Vakra Nivarthi After 30 Years: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகவும். அதுமட்டுமின்றி நவ கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக சனி கிரகம் கருதப்படுகிறது. இவரது அனைத்து வித மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான், தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். சமீபத்தில் அவர் நட்சத்திர பெயர்ச்சி அடைந்தார். மேலும் கடந்த ஜூன் 30 ஆம் தேதி சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார்.
இதனிடையே தீபாவளி பண்டிகைக்கு பிறகு சனி தனது போக்கை மாற்றி வக்ர நிவர்த்தி அடையப் போகிறார். இந்த நிகழ்வானது வருகிற நவம்பர் 15 ஆம் தேதி இரவு 08:07 மணிக்கு நிகழப் போகிறது. மேலும் சனி வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எனவே அந்த ராசிகளை (Zodiac Sign) பற்றி இங்கே காணலாம்.
ரிஷபம்: சனி வக்ர நிவர்த்தி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். இந்த காலகட்டத்தில், ரிஷப ராசிக்காரர்கள் செய்யும் அனைத்து பணியிலும் அதிர்ஷ்டம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். கல்விப் பணிகளில் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவீர்கள்.
கன்னி: சனியின் வக்ர நிவர்த்தி கன்னி ராசிக்காரர்களின் உறங்கி இருந்த அதிர்ஷ்டத்தை எழுப்பும். இந்த காலகட்டத்தில், உங்கள் வேலைகள் அனைத்தும் மெதுவாக முடிக்கப்படும். அலுவலகத்தில் புதிய திட்டத்தை பெறலாம். வருமானம் அதிகரிக்கும். வீட்டில் சமய நிகழ்ச்சிகள் நடத்தப்படும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். சகோதர சகோதரிகளுடன் நல்லுறவு ஏற்படும்.
கும்பம்: சனியின் வக்ர நிவர்த்தி கும்ப ராசிக்காரர்களுக்கு பல சாதகமான பலனைத் தரும். வேலையில் தடையின்றி வெற்றி கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். தொழில் நிலை வலுவாக இருக்கும். தொழிலில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். சமூக அந்தஸ்தும் கௌரவமும் உயரும். முதலீடுகள் மூலம் லாபம் உண்டாகும். திடீர் நிதி ஆதாயம் உண்டாகும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ