மார்ச் மாத ராசிபலன் 2023: மார்ச் மாதம் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. கிரகங்கள் மற்றும் நட்சத்திர மாற்றங்கள் மற்றும் இயக்கங்களின் அடிப்படையில் மார்ச் மாதம் சிறப்பானதாக இருக்கும். இந்த மாதம் பல கிரகங்கள் தங்கள் ராசிகளையும் இயக்கங்களையும் மாற்றும். சில கிரகங்கள் அஸ்தமித்து உதயமாகும். இதுமட்டுமின்றி, கிருஷ்ணருக்கு புனிதமாக கருதப்படும் ஹோலி பண்டிகையும் இம்மாதம் கொண்டாடப்படும். மார்ச் மாதம் நிகழவுள்ள கிரகங்களின் மாற்றங்களும் ஹோலி பண்டிகையும் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அன்பையும் மகிழ்ச்சியையும் பரப்பும்.
பிறக்கவுள்ள மார்ச் மாதத்தின் கிரக மாற்றங்களால் அனைத்து ராசிகளிலும் தாக்கம் ஏற்படும். எனினும் இந்த மாதம் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்களை அள்ளித்தரும். 4 ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் மிகவும் சிறப்பானதாக அமையப் போகிறது. அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மார்ச் 2023 அதிர்ஷ்ட ராசி பலன்
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் நல்ல வருமானம் கிடைக்கும். பதினொன்றாம் வீட்டில் புதன் மற்றும் குரு பார்வை உங்களுக்கு நல்ல பண ஆதாயத்தை தரும். மார்ச் மத்தியில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் செயல்பாடு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் அமையும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். அதன் மூலம் நீங்கள் சிறப்பாகச் செய்ய முடியும். வெளியூர் பயணம் சாத்தியமாகும். இந்த பயணங்களால் அனுகூலமான விளைவுகள் ஏற்படும். மறுபுறம், வெளிநாட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
மேலும் படிக்க | Astro Traits: தன் நலனே முக்கியம் என செயல்படும் ‘சில’ ராசிகள்!
வியாபாரத்திலும் நல்ல பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள். இந்த ராசிக்காரர்கள் சொத்துக்களில் முதலீடு செய்து நல்ல லாபம் ஈட்ட வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருப்பவர்கள் மாதத்தின் நடுப்பகுதியில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்கள் அதிக அளவில் பணம் சம்பாதிப்பார்கள். மார்ச் மாத தொடக்கத்தில், சில நிதி சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் பின்னர் நிலைமை சரியாகிவிடும். இந்த மாதம் பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சனி உதயமாகி இந்த ராசிகளின் செல்வம் பெருகும், விதி மாறும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ