தனுசு ராசியில் புதன் பெயர்ச்சி 2023: ஜோதிட சாஸ்திரப்படி புதன் தன் ராசியை அதிவேகமாக மாற்றும் கிரகம். புதன் செல்வம், வணிகம், பேச்சு மற்றும் தொடர்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. புதன் பெயரச்சி அடையும் போதெல்லாம், அனைத்து ராசிகளையும் பாதிக்கப்படும். அந்த வகையில் நவம்பர் மாதத்தில் புதன் பெயர்ச்சி அடையப் போகிறது. புதன் தனது ராசியை மாற்றி 27 நவம்பர் 2023 அன்று தனுசு ராசிக்குள் நுழைகிறார். 2024 ஆம் ஆண்டுக்கு முன் நடக்கும் இந்த புதன் பெயர்ச்சி மூன்று ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். புதன் இவர்களுக்கு தொழில், வியாபாரத்தில் பெரும் வெற்றியைத் தரக்கூடும். பொருளாதார நிலை மேம்படும். எனவே எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் / பெயர்ச்சி மக்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
தனுசு ராசியில் புதன் பெயர்ச்சி பெரிய பலன்களைத் தரும்:
மேஷம் (Aries Zodiac Sign): மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி (Mercury Transit 2023 in Sagittarius) சிறப்பான பலன்களைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருந்தால் எந்த பெரிய காரியத்தையும் சாதிக்கலாம். திட்டங்களால் ஆதாயம் பெறுவீர்கள். வெளியூர் பயணம் செல்லலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. வியாபாரம் செய்பவர்களுக்கு புதன் பெரிய பலன்களைத் தருவார். நீங்கள் ஒரு பெரிய ஆர்டரைப் பெறலாம் அல்லது ஒரு ஒப்பந்தம் இறுதி செய்யப்படலாம். ஏதேனும் மத அல்லது மங்கள நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கலாம்.
மேலும் படிக்க | குரு-சனியால் அதிர்ஷ்ட யோகம்.. 2024 இல் இந்த ராசிகளுக்கு பொற்காலம்
கன்னி (Virgo Zodiac Sign): கிரகங்களின் அதிபதியான புதன் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்குப் பொருள் மகிழ்ச்சியைத் தரும். புதிய வீடு வாங்கலாம். புதிய வாகனம் அல்லது ஆடம்பரப் பொருள் வாங்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியாக பலன் பெறலாம். கன்னி ராசிக்காரர்கள் சில ஊக்கத்தொகை அல்லது போனஸ் பெறலாம். உங்கள் அதிகரித்த ஆற்றல் வேலைகளை எளிதாக முடிக்க உதவும். உங்கள் தாயுடன் உங்கள் உறவு மேம்படும். அதுமட்டுமின்றி ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து வடிவமைப்பில் பணிபுரிபவர்களுக்கு இந்த நேரம் ஒரு வரப்பிரசாதம் போன்றது.
கும்பம் (Aquarius Zodiac Sign): புதனின் ராசி மாற்றம் (Budh Gochar 2023 November) கும்ப ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். கும்ப ராசிக்காரர்களின் வருமானத்தில் மிகப்பெரிய தாக்கம் காணப்படும். மேலும் உங்கள் சம்பளம் உயரக் கூடும். சில புதிய மூலங்களிலிருந்து நீங்கள் பணம் பெறலாம். மேலும் உங்கள் பணி பாராட்டப்படலாம். வியாபாரிகளும் லாபம் அடைவார்கள். முதலீடு நல்ல பலனைத் தரும். அதுமட்டுமின்றி ஏழரை சனியால் ஏற்பட்ட தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சுக்கிரன்-சனி இடமாற்றம்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கும்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு, ஆன்மீகம், வணிகம் என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ