சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!

கணபதியை வணங்கினால் காரியத்தடைகள் யாவும் நீங்கும். விக்ன விநாயகரை வணங்க வினையாவும் நெருங்காது. விக்னங்களை தீர்க்கும் விநாயகப் பெருமானை வழிபட்டால் வளமான வாழ்வு பெற்ற மகிழ்ச்சியாக வாழலாம் என்பது நம்பிக்கை. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 21, 2023, 07:36 PM IST
  • சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த திதியாகும்.
  • விக்னங்களை தீர்க்கும் விநாயகப் பெருமானை வழிபட்டால் வளமான வாழ்வு பெற்ற மகிழ்ச்சியாக வாழலாம்.
  • முழுமுதற் கடவுள், மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே.
சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை! title=

விக்னங்களை தீர்க்கும் விநாயகப் பெருமானை வழிபட்டால் வளமான வாழ்வு பெற்ற மகிழ்ச்சியாக வாழலாம் என்பது நம்பிக்கை. அதிலும் விநாயாருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி நாள் அவரை வழிபட மிகவும் உகந்த நாள். பௌர்ணமி திதிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி. விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது. 

கணபதியை வணங்கினால் காரியத்தடைகள் யாவும் நீங்கும். விக்ன விநாயகரை வணங்க வினையாவும் நெருங்காது. கல்வி, அறிவுத் திறன், புத்தி கூர்மை, வெற்றி, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் ஆகியவற்றி அள்ளிக் கொடுக்கும், இந்த விரதத்தை கடைபிடிக்க, சங்கடஹர சதுர்த்தி அன்று, காலையில் ஸ்னாநம் செய்து, அருகிலுள்ள விநாயகர் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். பிள்ளையாரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் மாலை சாற்றுவதும் விநாயகருக்கு அர்ச்சனை செய்வது சிறந்த பலனை கொடுக்கும். 

மேலும் படிக்க | 700 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் பஞ்ச மஹா யோகம்! ‘இந்த’ ராசிகளுக்கு பொற்காலம்!

விரத முழுவதும் அதாவது மாலை வரை உபவாசம் இருப்பது மிகவும் நல்லது. நீண்ட நேரம் சாப்பிடாமல் இருக்க முடியாதவர்கள், பால், பாழங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். மாலை வேளையில் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். வீட்டிலேயே சக்திக்கு ஏற்றவாறு கொழுக்கட்டை, சுண்டல் செய்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்யலாம்.

முழுமுதற் கடவுள், மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே. எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டு தான் ஆரம்பிக்கிறோம். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள்புரிவார் விநாயகர். அதனால் தான் அவர் எல்லோருக்கும் பொதுவாகவும், சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.

சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த திதியாகும். சதுர்த்தி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் திதி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பூரண நாளையும் அடுத்து வரும் நான்காவது திதி சதுர்த்தி ஆகும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News