Bizarre Warning! திருமணமாகாத தம்பதிகள் பூங்காவிற்குள் நுழைய வேண்டாம்

"திருமணமாகாத தம்பதிகள் பூங்காவிற்குள் அனுமதிக்கப்படுவதில்லை" என ஒழுக்க வரையறைகளை புதிதாக நிர்ணயம் செய்திருக்கிறது ஒரு பூங்கா நிர்வாகம். அதன் எதிர்வினைகள் என்ன தெரியுமா?

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 26, 2021, 10:54 PM IST
  • திருமணமாகாத தம்பதிகள் பூங்காவிற்குள் நுழைய வேண்டாம்
  • திருமணமான தம்பதிகள் தான் பூங்காவிற்குள் செல்ல வேண்டுமா?
  • பூங்காவிற்குள் செல்பவர்கள் அநாகரீகமான நடந்து கொள்வார்கள் என எப்படி முடிவு செய்வது?
Bizarre Warning! திருமணமாகாத தம்பதிகள் பூங்காவிற்குள் நுழைய வேண்டாம் title=

ஹைதராபாத்: ஒழுக்க வரையறைகளை கொண்டது கலாசாரம். ஆனால், வரையறைகள் எப்போதும் ஒரே வரையறைக்குள் அடங்குவதில்லை. கால மாறுதல்களில் வரையறைகளும், விதிமுறைகளும் மாறும். கலாசாரத்திலும் மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உண்மை.

ஆனால், இதை எத்தனை பேர் புரிந்துக் கொள்கின்றனர்? 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வழக்கம் இன்று மாறியிருக்கும், ஆனால், கலாசார காவலர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர் செய்யும் அடாவடிகள் அவ்வப்போது வெளியாகி சர்ச்சைகளை கிளப்பும்.

அதில் அண்மைச் செய்தியாக வெளியாகி, சமூக ஊடகங்களில் வைரலாகிறது இந்த செய்தி.  ‘திருமணமாகாத தம்பதிகள்’ பூங்காவிற்குள் நுழைவதைத் தடை செய்யும் பேனர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு பூங்காவில் வைக்கப்பட்டது.

இந்திரா பூங்காவிற்கு வெளியே உள்ள அடையாள பலகையில், "திருமணமாகாத தம்பதிகள் பூங்காவிற்குள் அனுமதிக்கப்படுவதில்லை" என்று இந்த பேனர் கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சியால் பூங்காவிற்கு வெளியே வைக்கப்பட்டது. "அநாகரீகமான செயல்பாடு" என்ற காரணத்தைக் கூறி இந்த பேனர் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

சர்ச்சையை ஏற்படுத்தி வைரலாகும் இந்த பேனரின் படத்தைப் பகிர்ந்துள்ள ட்விட்டர் பயனர் மீரா சங்கமித்ரா, “தலைக்குனிவு, இதைவிர தரம் குறைந்து போக முடியுமா? எம்ஜிஎம்டியின் இந்திரா பார்க் புதிய காலசார காவலனாக செயல்படுகிறது.

பொது பூங்கா என்பது பாலினங்களைத் தாண்டி, சட்டத்தை மதிக்கும் குடிமக்களுக்கான திறந்தவெளி ஆகும். ஒரு பூங்காவிற்குள் செல்வதற்கு 'திருமணம்' எப்படி அளவுகோலாக இருக்கும்? இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது."

"மேலும், இது தெளிவாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான நடவடிக்கை. இந்திரா பூங்காவிற்கு அடிக்கடி வரும் பெரும்பாலான தம்பதிகள் குறைந்த, நடுத்தர வருமான வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களால் ஹை-ஃபை பப்கள் மற்றும் பிற விலையுயர்ந்த இடங்களை அணுக முடியாது. இந்த பூங்காக்களை அணுக தொழிலாள வர்க்க இளம் தம்பதியினருக்கு முழு உரிமை உண்டு. அபத்தமான கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரவும்” என்று எழுதியுள்ளார்.

இந்த வித்தியாசமான அறிவிப்பு பதாகையைப் பார்த்து கோபமடைந்த நெட்டிசன்கள் பூங்கா அதிகாரிகளை கடுமையாக சாடினர், 'மூர்க்கத்தனமானவர்கள்' என்று நெட்டிசன்கள் பொங்குகின்றனர். பொது இடங்களுக்குள் நுழைவதற்கு திருமண சான்றிதழ்களையும் இனிமேல் கொடுக்க வேண்டும் போல! என்று கேட்டு பலர் கிண்டலும் கேலியுமாக பதிவிட்டுள்ளனர். 

“அடுத்த முறை, எங்காவது செல்லும்போது, புகைப்பட அடையாள அட்டை, ஆதார் மட்டுமல்லாமல் திருமணச் சான்றிதழையும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். அடுத்தது மதம் மற்றும் சாதி சான்றிதழும் தேவைப்படலாம்” என்று சீற்றத்துடன் பதிவிட்டுள்ளார்.

"பூங்காவிற்கு வருகை தரும் திருமணமான தம்பதிகளை சரிபார்க்க ஏன் மற்றொரு செயலியை உருவாக்கக்கூடாது. அதை ஓ-வின் (O-WIN) என்று அழைக்கலாம்.

இருப்பினும், இந்த பூங்காக்கள் விபச்சாரத்தின் மையங்கள் என்று கூறி இந்த நடவடிக்கையை ஆதரிக்கும் சிலரும் இருக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் எழுந்த எதிர்ப்பிற்குப் பிறகு, பூங்கா நிர்வாகத்தினர் பேனரை அகற்றிவிட்டனர். “டிடி யுபிடியால் பேனர்கள் அகற்றப்பட்டன. சிரமத்திற்கு வருந்துகிறோம். பூங்காவில் அமைதியான சூழ்நிலையை பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 

பூங்காவின் சூழலை பராமரிக்க விழிப்புடன் இருக்குமாறு உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளோம்” என்று செகந்திராபாத்தின் மண்டல ஆணையர் தெரிவித்துள்ளார்.

ALSO READ | கணவன்-மனைவி இடையிலான பாலியல் உறவு ‘வலுக்கட்டாயம் என்றாலும்’ கற்பழிப்பு அல்ல

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News