உலகின், அதிசயமான, தனித்துவமான விஷயங்கள் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகின்றன. அதில் ஒன்றும் தான் நீளமான முக்கு கொண்ட நபரின் கதை. அறிந்து பயனர்கள் பலர் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர் . சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ள தாமஸ் வேடர்ஸின் கதை சமூக ஊடக பயனர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஹிஸ்டாரிக் வீட்ஸ் என்ற ட்விட்டர் பக்கம் ரிப்லியின் பிலிவ் இட் ஆர் நாட் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அவரது தலையின் படத்தை வெளியிட்டபோது இந்த கதை சமூக ஊடக பயனர்கள் அறிந்து கொண்டனர்.
ட்விட்டர் கணக்கில் நவம்பர் 12 அன்று பதிவிடப்பட்ட ஒரு ட்வீட்டில், தாமஸ் வேட்ஹவுஸின் மூக்கு 7.5 அங்குல நீளம் கொண்டது என்று கூறப்பட்டுள்ளது. கின்னஸ் உலக சாதனைகளின் (GWR) இணையதளத்தில் இந்த நபரைப் பற்றிய ஒரு பக்கமும் உள்ளது. இது அவரைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது. இந்த தகவல் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
Thomas Wadhouse was an English circus performer who lived in the 18th century. He is most famously known for having the world's longest nose, which measured 7.5 inches (19 cm) long. pic.twitter.com/Gx3cRsGXxd
— Historic Vids (@historyinmemes) November 12, 2022
ஹிஸ்டாரிக் வீட்ஸ் தனது ட்வீட்டில், '18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு ஆங்கில சர்க்கஸ் கலைஞர் தாமஸ் வேட்ஹவுஸ். 7.5 இன்ச் (19 செ.மீ.) நீளம் கொண்ட உலகின் மிக நீளமான மூக்கிற்கு அவர் பிரபலமானவர். இந்த ட்வீட்டை 1.20 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் விரும்பியுள்ளனர் மற்றும் 7,200 க்கும் மேற்பட்டவர்களால் ரீட்வீட் செய்துள்ளனர்.
மேலும் படிக்க | பாம்பு கடித்த மகனை தோளில் சுமந்து சென்ற தந்தை: வீடியோ வைரல்
தனது இணையதளத்தில் வேட்ஹவுஸ் சாதனையை ஒப்புக்கொண்ட கின்னஸ் உலக சாதனைகள், '1770 களில் இங்கிலாந்தில் வாழ்ந்த மற்றும் சர்க்கஸில் உறுப்பினராக இருந்த தாமஸ் வேட்ஹவுஸின் மூக்கு 19 செ.மீ (7.5 அங்குலம்) இருந்ததாக வரலாற்று கணக்குகள் உள்ளன.
இருப்பினும், உயிருடன் இருக்கும் ஒருவரின் (ஆண்) மிக நீளமான மூக்கு என்ற சாதனை துருக்கியின் மெஹ்மத் ஓசுரெக் பெயரில் பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் கின்னஸ் உலக சாதனை மூலம் இந்த சாதனை உறுதிப்படுத்தப்பட்டது, மேலும் மூக்கின் நீளம் 3.46 அங்குலமாக அளவிடப்பட்டது.
மேலும் படிக்க | Viral News: இலக்கை எட்டாத பணியாளரின் மண்டையை உடைத்த மேலதிகாரி!