உங்கள் பெயர் என்ன? இது தான் ஒரு பெட்ரோல் பங்க் உரிமையாளரின் கேள்வி. அவர் விரும்பும் பெயர் உங்களுக்கு இருந்தால், இனி உங்களுக்கு பெட்ரோல் இலவசம்! அதுவும் பெட்ரோல் விலை மூன்றிலக்கத்தை தொட்டிருக்கும் நிலையில் இந்த பெயரை வைத்திருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்.
உங்கள் பெயர் மட்டுமே அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா? ஆனால் இனிமே நம்பித்தான் ஆகவேண்டும்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெட்ரோல் பம்ப் உரிமையாளர் அறிவித்திருக்கும் ஆச்சரிய அறிவிப்பு இது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
Gujarat | Ayuub Pathan, a petrol pump owner in Bharuch, offers free petrol, up to Rs 501, to people who share their names with Olympic gold medallist Neeraj Chopra.
"It is our 2-day scheme to honour him. We're entertaining all valid ID Card-holding namesakes of Chopra," he said. pic.twitter.com/PAc43jYw6Q
— ANI (@ANI) August 9, 2021
நீரஜ் என்ற பெயர் உங்களுக்கு இருந்தால் போதும், வேறு எந்த தகுதியும் வேண்டாம். வாடிக்கையாளர்களுக்கு இலவச பெட்ரோலை வழங்கும் முடிவை எடுத்திருக்கிறார் இந்த பெட்ரோல் உரிமையாளர்.
குஜராத்தின் பரூச் நகரில் பெட்ரோல் பம்ப் வைத்திருக்கும் அயூப் பதான், ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு தனக்கு தெரிந்த வகையில் சிறப்பு செய்கிறார். நீரஜ் என்ற பெயரை வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவரது பெட்ரோல் பங்கில் 501 ரூபாய் வரைக்கும் இலவச பெட்ரோல் வழங்குகிறார். இந்த சலுகையைப் பெற தங்கள் பெயரை கொண்ட அடையாள அட்டையை கொண்டு வந்தால் போதும்.
Also Read | Tokyo Olympics: ஒலிம்பிக் வெற்றியாளர்களுக்கு பரிசு மழை பொழியும் BCCI
இரண்டு நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த சலுகைத் திட்டம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு மரியாதை அளிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீரஜ் சோப்ரா சனிக்கிழமை டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கத்தை வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை சோப்ரா பெற்றார். ஹரியானா மாநிலம் பானிபட் அருகே உள்ள கந்த்ரா கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான தடகள வீரர் நீரஜ் சோப்ரா.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இறுதிப் போட்டியில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்தார். இந்த சாதனைக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக அவருக்கு பல்வேறு பரிசுகளை மத்திய-மாநில அரசுகளும், நிறுவனங்களும் வழங்குகின்றன. ஆனால் அவரது பெயரை வைத்திருக்கும் ஒரே காரணத்திற்காக பரிசு பெறும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார் குஜராத்தின் பெட்ரோல் பம்ப் உரிமையாளர் அயூப் பதான்.
Also Read | Tokyo Olympics: தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு CSK 1 கோடி ரூபாய் பரிசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR