வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
குரங்குகள் உலகில் உள்ள மிகவும் அறிவார்ந்த உயிரினங்களில் ஒன்றாகும். இவற்றின் புத்திசாலித்தனத்தை எடுத்துக்காட்டும் பல வீடியோக்களை நாம் சமூக வலைதளங்களில் தினமும் காண்கிறோம். குரங்குகளின் பல வேடிக்கையான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன. மனிதர்கள் செய்வதை அப்படியே செய்வதில் குரங்குகள் வல்லமை படைத்தவை.
தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒரு குரங்கு வீடியோவை பார்த்தால் நம்புவதற்கு கடினமாக இருக்கலாம். ஆனால், இது உண்மையாக நடந்துள்ள சம்பவமாகும். இந்த வீடியோ காண்பதற்கு விசித்திரமாக இருந்தாலும், காண்பவர்கள் முகத்தில் இது கண்டிப்பாக புன்னகையை கொண்டு வருகின்றது. இந்த வீடியோவில் குரங்கு அப்படியே மனிதர்கள் போன்ற ஒரு செயலை செய்வதை காண முடிகின்றது.
குரங்குகள் மிகவும் குறும்புத்தனமான விலங்குகள் என்றாலும், இவை புத்திசாலி மிருகங்களாக கருதப்படுகின்றன. தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோவில் உள்ள குரங்கை பார்த்தால் உங்களுக்கு ஒருபுரம் சிரிப்பு வந்தாலும், மறுபுறம் பாசமும் பொங்கும். இந்த வீடியோவில், குரங்கு ஒன்று பாத்திரங்களை சுத்தம் செய்வதைக் காண முடிகின்றது. பாத்திரங்களை குரங்கு நன்றாக சேர்த்து சுத்தம் செய்வதை வீடியோவில் காண முடிகின்றது.
Time to laugh..#monkeyvideo #ViralVideo #trending #bandarkavideo #funnyvideo pic.twitter.com/iVMOgKb7sG
— SuVidha (@IamSuVidha) November 21, 2022
மேலும் படிக்க | Viral Video: என்னடா இது வீரனுக்கு வந்த சோதனை... சிங்கத்தை பந்தாடும் எருமைகள்!
மிக மும்முரமாக குரங்கு இந்த வேலையை செய்வது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், குரங்கின் மீது பரிதாபமும், குரங்கிடம் வேலை வாங்குகிறார்களே என்ற சிறிய கோவமும் கூட வருகிறது.
வைரலான வீடியோவை SuVidha என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள்.
குரங்கு பாத்திரங்களை சுத்தம் செய்யும் அழகை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். சிலர் குரங்கை, ‘வாஷிங் எக்ஸ்பர்ட்’ என கூறி வருகிறார்கள். இப்படி வேலை செய்யும் குரங்கை பார்த்து மகிழ்ந்த சில பயனர்கள் அதை தங்கள் வீட்டிலேயே வைத்திருக்க விரும்புகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ