எனது ஆசானும், என் தந்தைக்கு இணையானவருமான கருணாநிதி விரைவில் குணமடைவார் என குஷ்பு ட்விட்டர்!!
தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வயது மூப்பின் காரணமாக உடல் நலிவு ஏற்பட்டுள்ளது. மேலும், சிறுநீரகத் தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ள காரணத்தால் தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கோபாலபுரம் வந்து கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரித்துச் செல்கின்றனர்.
இந்நிலையில், கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களின் டிவிட்டரில் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். இதை தொடர்ந்து, இந்நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசியலில் எனது ஆசானும், என் தந்தைக்கு இணையானவருமான கருணாநிதி விரைவில் குணமடைவார். தமிழக மக்களுக்காக கட்டாயம் குணமடைவார். அவர் நல்லெண்ணங்களின் தூதுவர். ‘சீக்கிரம் நலமடையுங்கள் அப்பா’. உங்கள் கர்ஜனையை கேட்க காத்திருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
My guru in politics and father figure @kalaignar89 will be fine.. he should be fine..for the people of TN.. he is the messiah of goodwill.. get well soon Appa..we are waiting to hear you roar..
— khushbusundar..and it's NAKHAT KHAN for the BJP.. (@khushsundar) July 26, 2018
திமுக தலைவர் கருணாநிதியை நேற்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோரும் நேரில் சென்று செயல் தலைவர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.