லைப் பார்ட்னர் உங்களுக்கு துரோகம் செய்கிறாரா...? கண்டுபிடிப்பது எப்படி?

Relationship Tips: திருமண உறவில் உங்களின் பார்ட்னரிடம்  இந்த அறிகுறிகள் தென்படும்பட்சத்தில், அவர் உங்களுக்கு துரோகம் செய்ய அதிக வாய்ப்புள்ளது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம். 

  • Oct 12, 2024, 13:18 PM IST

திருமண உறவில் இருவரும் ஒரே எண்ணோவோட்டத்துடன் நேர்மையாகவும், விஸ்வாசமாகவும் இருந்தால்தான் அது ஆரோக்கியமான ஒன்றாக இருக்கும். மாறாக ஒருவர் உறவில் துரோகத்தில் ஈடுபடுகிறார் என்றால் அவர் மற்றொருவரை பொருளாதார ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுரண்டுகிறார் என அர்த்தம்.

1 /8

திருமண உறவில் (Marriage Relationship) துரோகம் என்பது மனைவிக்கோ/கணவனுக்கோ தெரியாமல் திருமணத்தை தாண்டிய உறவு வைத்துக்கொள்வது என புரிந்துகொள்ளலாம். உறவில் ஒருவரின் நம்பிக்கையை மற்றொருவர் உடைத்து அந்த உறவையை நீர்த்துப்போகச் செய்கிறார் எனில் அவர்தான் துரோகத்தில் ஈடுபட்டிருக்கிறார் என அர்த்தம்.  

2 /8

அப்படியிருக்க, திருமண உறவில் ஒருவர் துரோகம் (Infidelity) செய்கிறார் எனில் மற்றொருவர் நிச்சயம் பாதிக்கப்படுவார். அந்த வகையில், கணவனிடமோ/மனைவியிடமோ இதுபோன்ற 5 அறிகுறிகள் தென்பட்டால் அவர் உறவில் துரோகம் செய்ய அதிக வாய்ப்புள்ளது. இது காதல் உறவுக்கும் பொருந்தும். அந்த 5 அறிகுறிகளை இங்கு காணலாம்.   

3 /8

- உங்கள் பார்ட்னர் அவரின் லேப்டாப் அல்லது மொபைல் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களை அதிக கவனத்துடனும், உங்களை அதன் பக்கம் நெருங்கவிடாமல் இருக்கிறார் என்றால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அடிக்கடி பாஸ்வேர்டை மாற்றுவது, நீங்கள் பக்கத்தில் வரும்போது மொபைலை மறைத்து வைப்பது, மொபைலை கேட்டால் சமாளிப்பது ஆகியவற்றை நீங்கள் அறிகுறியாக பார்க்க வேண்டும்.  அப்போதே உறவில் தனியுரிமை மற்றும் நம்பிக்கை குறித்து இருவரும் கலந்தாலோசிக்க வேண்டும்.   

4 /8

- அதிகம் பொய் சொல்கிறார் என உங்களுக்கு சந்தேகம் வந்தால் அதனை உடனே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். விதவிதமாக சமாளிப்பது, அடிக்கடி பொய் சொல்லி மாட்டிக்கொள்வது ஆகியவை நிச்சயம் சந்தேகப்பட வேண்டியது. இருப்பினும், பார்ட்னர் உடன் தகுந்த உரையாடல் மூலம் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளலாம்.   

5 /8

- திடீரென பார்ட்னர் உங்களிடம் மிகவும் அன்பாகவும், உங்கள் மீது அதிக கவனம் காட்டினாலும் நீங்கள் அதை சந்தேகத்திற்கு உள்ளாக்கலாம். அனைத்தையும் சந்தேகப்பட வேண்டுமா என கேட்டால், அது தவறு. ஆனால், ஒருவரின் செயல்பாடுகள் திடீர் மாற்றமடைகிறது என்பதே சந்தேகத்திற்கு உறியது. அவர் ஏன் திடீரென வித்தியாசமாக செயல்படுகிறார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.  

6 /8

- உரையாடலில் உங்களின் கேள்விகளை அவர் தவிர்க்கிறார் என்றாலும் நீங்கள் சந்தேகப்பட வேண்டும். இரவில் நீண்ட நேரம் கழித்து வருவது, திடீரென வீட்டில் இருந்து வெளியே கிளம்புவது என உங்கள் பார்ட்னரின் செயல்பாடுகள் சந்தேகத்தை கிளப்பினால் உடனே அதில் கேள்வி எழுப்புங்கள். அவர் தகுந்த பதில் சொல்லவில்லை என்றால் நிச்சயம் கறாரான உரையாடலை மேற்கொள்ளுங்கள்.   

7 /8

- உங்களுடன் நேரம் செலவிடுவதை பார்ட்னர் குறைத்துவிட்டார் என்றாலும் அதை கேள்வி எழுப்புங்கள். நீங்கள் வெளியே செல்லும் பிளான்களை அடிக்கடி கடைசி நேரத்தில் ஒத்திவைப்பது, உங்களை தனியாக வெளியே அனுப்புவது ஆகியவை நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியது. உடல் ரீதியாகவும் அவர் உங்களிடம் இருந்து விலகுவது தெரிந்தால் உடனே அதுகுறித்து கேள்வி எழுப்புங்கள்.  

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை. எனவே, இதனை பின்பற்ற தொடங்கும் முன் உரிய வல்லுநரை சந்தித்து அவரிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்பதை வாசகர்கள் மனதில்கொள்ள வேண்டும். இந்த தகவல்களை Zee News உறுதிப்படுத்தவில்லை.