Tips To Have Good Work Relationship With Your Boss: உங்களில் பலருக்கு, உங்கள் பாஸ் உடன் வேலை செய்யும் போது அவருடன் நல்ல உறவை பேண வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதை அடைய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் என்ன தெரியுமா?
Tips To Have Good Work Relationship With Your Boss: நாம் வேலை செய்யும் இடத்தில், நமக்கு மேல் அதிகாரியாக இருப்பவருடன் நல்ல உறவில் இருப்பது எப்போதுமே நல்லது. இது, உங்களுக்கு நல்ல வகையிலான வேலை இடத்தை வழங்குவதோடு நீங்கள் தொழில் ரீதியாக முன்னேறுவதற்கும் வழி வகுக்கும். ஆனால், இதையும் அளவுக்கு மீறி செய்து விடக்கூடாது. அப்படி, சரியான அளவுகோலுடன் உங்கள் பாஸ் உடன் நல்ல உறவை பேணுவது எப்படி? அதற்கான டிப்ஸ், இதோ!
நேர்மையாக இருப்பதில் எப்போதும் ஒரு தனி அழகு இருக்கிறது. எனவே, உங்கள் பாஸ் உடன் பேசும் போது நேர்மையாகவும் உண்மையாகவும் இருங்கள். சந்தேகம் இருந்தாலும், எந்த விஷயம் தெளிவாக இல்லை என்றாலும் அதை கேட்டு தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
உங்கள் பாஸ் எப்படிப்பட்ட ஆள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவர் முகத்தை பார்த்து பேசுவதை விரும்புபவரா, இ-மெயிலில் பேசுபவரா என்பதை கற்க வேண்டும். அவருக்கு எது விருப்பமோ, அதன்படி நீங்கள் பேச வேண்டும்.
ஒரு வேலையை முடித்து தருகிறேன் என்று கூறினால், குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த வேலையை நீங்கள் முடித்து கொடுத்திருக்க வேண்டும். மேலிடத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, பொதுவாகவே மனிதர்களுக்கு சொன்ன சொல் தவறாதவர்களை பிடிக்கும்.
அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால், நீங்கள் அதை அவரிடம் கூறுவதோடு மட்டுமன்றி அதை சரி செய்ய சில யோசனைகளையும் கூறலாம்.
உங்கள் பாஸிற்கு பல வேலைகள் இருக்கலாம். எனவே, அவரது நேரத்தையும் அவரையும் மதித்து நடக்க வேண்டும்.
உங்கள் பாஸ், உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார் என்றாலோ, அல்லது எதிலாவது உதவி செய்தாலோ அவருக்கு நன்றி கூறலாம். இது உங்களை அவர் மனதில் நல்ல இடத்தில் நிறுத்தி வைக்கும்.
எந்த உறவிற்கும் ஒரு எல்லை உண்டு. எனவே, உங்கள் உறவை வேலை குறித்தும், அலுவலகம் குறித்தும் மட்டும் இருக்க வேண்டும்.