ஐப்பசிக்கு பிறகு கார்த்திகை மாதத்தை உருவாக்கும் சூரியன்! சூரியனின் விருச்சிக ராசி பெயர்ச்சி!

Rasipalan Of Karthigai Month : சூரியன் தனது ராசியை மாற்றும் போதெல்லாம் தமிழ் மாதம் பிறக்கிறது. நவம்பர் மாதம் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியனின் சஞ்சார மாற்றம் கார்த்திகை மாதத்தை உருவாக்குகிறது... 

Sun Transit Nov 2024 : தீபாவளிக்குப் பிறகு நவம்பர் 16 ஆம் தேதி காலை 7.16 மணிக்கு சூரிய பகவான் துலாம் ராசியிலிருந்து வெளியேறி விருச்சிக ராசிக்குள் நுழைவார்.

1 /14

சூரியனின் ராசி மாற்றம் 12 ராசிகளில் 7 ராசிகளுக்கு சாதகமாக அமையும். இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றியும், மன உறுதியும் கிடைக்கும். 

2 /14

மீன ராசிக்காரர்களுக்கு புதிய வீடு அல்லது சொத்து வாங்கும் வாய்ப்பை தரும் கார்த்திகை மாதத்தில் அன்னை லட்சுமி தேவியின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும்

3 /14

சூரியனின் ராசி மாற்றம் கும்ப ராசிக்காரர்களுக்கு  நல்ல செய்திகளைத் தரும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணத்தைத் திரும்பப் பெறலாம். 

4 /14

கல்வியில் ஆர்வம் ஏற்படும். தொழில் சிறக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். உற்றார் உறவினர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும், அனைவரிடமும் பாராட்டு கிடைக்கும்

5 /14

பயணங்களின் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், தொழில் தொடர்பான புரிதல் உண்டாகும். தனுசு ராசியினர் மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்பட்டால் மகிழ்ச்சி பெருகும்.  

6 /14

விருச்சிக ராசிக்காரர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். நிதி நெருக்கடியில் இருந்து விடுபடலாம். பொருளாதார நிலை வலுப்பெறும் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். திடீர் பண ஆதாயமும் கூடும்.  

7 /14

துலாம் ராசிக்காரர்கள், நீண்ட நாட்களாக ஏதேனும் நோயால் அவதிப்பட்டு வந்தால் அது நீங்கி ஆரோக்கியம் சீராக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் வெற்றி பெறுவீர்கள்.

8 /14

முதலீடு செய்வதற்கும் நேரம் நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகளில் வெற்றி கிடைக்கும். கன்னி ராசி வியாபாரிகளுக்கு நல்ல நேரம் இது

9 /14

சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். சமய காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை வாய்ப்பு கிடைக்கும். 

10 /14

ஆரோக்கியம் சீராக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் வெற்றி பெறுவீர்கள். கடக ராசிக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும் சூரிய பெயர்ச்சி இது

11 /14

மிதுன ராசிக்காரர்களுக்கு கார்த்திகை மாதம் அமர்க்களமாக இருக்கும். அனைவரின் அன்பையும் ஆதரவுகளையும் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் தேவையில்லாத விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது

12 /14

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் நல்ல செய்திகளைத் தரும். பெரிய நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன, நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாய் நிறைவேறும்

13 /14

குடும்பத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். குடும்பத்தில் இருந்துவந்த சூழல் படிப்படியாக நல்லபடியாக மாறும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிணக்குகள் நீங்கும்

14 /14

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது