ஹன்சிகா மோட்வானி ஒரு இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் தோன்றுகிறார். ஷக்கலக்கா பூம் பூம் என்றழைக்கப்பட்ட தொடரின் மூலம் ஹன்சிகா அவரது தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கினார்.
ஹன்சிகா, பூரி ஜெகனாத்தின் தெலுங்குத் திரைப்படம் தேசமுதுருவில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக முதன்முதலில் அறிமுகமானார். நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.