உங்கள் பிள்ளையின் மூளை ஜெட் வேகத்தில் இயங்க.. நினைவாற்றல் பெருக... உதவும் சூப்பர் உணவுகள்

குழந்தைகளின் நினைவாற்றலுக்கு உதவும் உணவுகள்: ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை படிப்பில் மிக சுட்டியாகவும், எப்போதும் வகுப்பில் முதலிடம் பெற வேண்டும்ம் விரும்புகிறார்கள்.  வாழ்க்கையில் சாதனை படைக்க மூளை ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும். 

பெரும்பாலான குழந்தைகளின் பிரச்சனை என்னவென்றால், அவர்களால் விஷயங்களை படித்த விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. சில குழந்தைகளுக்குன் படிப்பின் கவனம் இருக்காது. எனவே, தேர்வின் போது அதிக மதிப்பெண்கள் எடுப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாகிறது.

1 /10

குழந்தைகள் அதிக மதிப்பெண் எடுக்காததற்கு படிப்பில் கவனம் செலுத்தாததே காரணம். மேலும், சில குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், மூளை சுறுசுறுப்பாக செயல்பட உதவும் உணவுகளை அவர்களுக்கு உணவளிக்க வேண்டியது அவசியம். அப்படிப்பட்ட சில சூப்பர் உணவுகளை அறிந்து கொள்வோம்.

2 /10

நட்ஸ்: மூளை ஆற்றலுக்கு உதவும் ஆக்ஸிஜனேற்றிகள், துத்தநாகம், ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் போன்ற அனைத்தும் உலர்பழங்ககளில் காணப்படுகின்றன. அதிலும் பாதாம் பருப்பு, வாதுமை பருப்பு இரண்டுமே நினைவாற்றலை அதிகரிக்கும் சூப்பர் உணவு.

3 /10

முட்டை:  ஒரு சிறந்த புரத ஆதாரமாக கருதப்படும் முட்டையின் மஞ்சள் கருவில் நினைவாற்றல் வளர்ச்சிக்கு உதவும் கோலின் நிறைந்துள்ளது. உங்கள் பிள்ளைகளுக்கு  தினமும் ஒரு முட்டை கொடுப்பதன் மூலம் அவரது நினைவாற்றலைக் கூர்மைப்படுத்தலாம்.

4 /10

வேர்க்கடலை: ஏழைகளின் பாதாம் எனப்படும் வேர்க்கடலை மூளை நன்றாக செயல்பட உதவுகிறது. மேலும், வேர்க்கடலையில் உள்ள வைட்டமின் ஈ, சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இதனை தினமும் சிறிதளவு உட்கொள்வது உங்கள் குழந்தையின் நினைவாற்றலை அதிகரிக்கும்.

5 /10

தக்காளி: ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் லைகோபீன் என்ற தனிமம் தக்காளியில் அதிகம் உள்ளது. பிள்ளைகளுக்கு இதனை தினமும் கொடுப்பதால் ஞாபக சக்தியை அபாரமாக இருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.

6 /10

பெர்ரி பழங்கள்: ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ள ஸ்ட்ராபெர்ரி மற்றும் அவுரிநெல்லிகள் மூளையை கூர்மையாக்க உதவுகிறது. பெர்ரிகளை தினமும் உட்கொள்வது மூளையை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.

7 /10

மீன் உணவுகள்: ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதம் மீன் உணவுகள் மூளை சக்தியை அதிகரிப்பதற்கும் நினைவாற்றலை அதிகரிப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை மூளையை கூர்மையாக்குகின்றன.

8 /10

பருப்பு வகைகள்: புரதம், நார்ச்சத்துக்களின் நல்ல மூலமான பருப்புகள் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு செயல்பாட்டிற்கு அவசியம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் குழந்தைக்கு தினமும் பருப்புகளை கொடுப்பதால் பல விஷயங்களை சிறப்பாகக் கற்றுக்கொள்ள முடியும்.

9 /10

பால்: கால்சியத்தின் முக்கிய ஆதாரமாக பால் கருதப்பட்டாலும், அது எலும்புகளுக்கும் மூளைக்கும் நன்மை பயக்கும். மூளை திசுக்களின் வளர்ச்சிக்கு உதவும், வைட்டமின் பி இதில் அதிகம் உள்ளதே இதற்கு காரணம்.

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.