மார்ச் மாத கிரக பெயர்ச்சிகள்... இந்த ராசிகளுக்கு.... இனி எல்லாம் சுகமே

Planet Transit in March: கிரக பெயர்ச்சிகளின் பார்வையில் மார்ச் மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மார்ச் மாதத்தில், மிக முக்கிய சனிப்பெயர்ச்சியுடன், சுக்கிரனின் வக்கிரப் பெயர்ச்சி, சூரிய பெயர்ச்சி ஆகியவை, அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மார்ச் மாத பலன்கள்: சனி பெயர்ச்சி, சூரிய பெயர்ச்சி மட்டுமல்லாது சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியும், புதன் அஸ்மனமும் என பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், இந்த கிரக நிலைகளின் மாற்றம் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்கின்றனர் ஜோதிடர்கள். 

1 /8

சனி பெயர்ச்சி 2025: மார்ச் மாதத்தில் மிக முக்கிய பெயர்ச்சியான சனி பெயர்ச்சி நடைபெற உள்ளது. மார்ச் 29ஆம் தேதி நடக்கும் சனி பெயர்ச்சிக்கு முன்னதாக மார்ச் இரண்டாம் தேதி, சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இருந்து பூரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

2 /8

மார்ச் மாத தொடக்கத்தில் சுக்கிரனின் வக்கிர பெயர்ச்சியும் முக்கியத்துவம் பெறுகிறது. புதன், புரட்டாதி நட்சத்திரத்தில் இந்த விலகி உற்றத்த உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மார்ச் மாதத்தில் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

3 /8

மேஷ ராசி: உத்தியோகத்தில் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். வருமானம் கூடும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முதலீட்டின் மூலம் எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.

4 /8

சிம்ம ராசி: நிதிநிலைமை மேம்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. உடல் நல பிரச்சனைகள் பண பிரச்சனைகள் நீங்கி மனதில் நிம்மதி பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

5 /8

விருச்சிக ராசி: அலுவலகப் பணியில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. பொருளாதார நெருக்கடிகள் நீங்கி குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் நீடிக்கும்.

6 /8

தனுசு ராசி: நிதி நெருக்கடிகள் கடன் தொல்லைகள் நீங்கி வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் இதனை சாத்தியமாக்கும். இதனால் வரை சந்தித்து வந்த உடல்நல பிரச்சனைகள் நீங்கும்.

7 /8

மீன ராசி: வேலையில் தொழிலில், முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதனைப் பயன்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்லலாம். புதிய உறவுகள் உருவாகும். உடல் நலம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கி மனம் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கும்.  

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.