ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களின் குணாதிசயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அந்த குணாதிசயங்கள் நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி, அவற்றின் மூலம், ஒருவரின் ஆளுமையின் மறைந்திருக்கும் பல ரகசியங்களை எளிதில் தெரிந்துகொள்ள முடியும். சிலருக்கு பிறர் மகிழ்ச்சியாக இருந்தாலோ அல்லது வெற்றி அடைந்தாலோ பிடிக்காது. பொறாமை உணர்வு அதிகமாக இருக்கும் அத்தகைய ராசிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு எளிதில் பொறாமை குணம் ஏற்படுகிறது. எல்லா இடங்களிலும் இவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என நினைக்கும் அதே நேரத்தில், அவர்களின் ஆசை நிறைவேறாத போது, வெற்றி பெற்ற மனிதனை பார்த்து பொறாமை கொள்வது மட்டுமின்றி, அவரை வீழ்த்த சதி வேலையிலும் ஈடுபடுவார்கள்.
மகர ராசிக்காரர்கள் தங்கள் வெற்றிக்காக அதிக முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால் அதுஅவர்களுக்கு கிடைக்காதபோது, மற்றவர்களின் மீது பொறாமைப்படுவதைத் தடுக்க முடியாது.
தனுசு ராசிக்காரர்கள் மற்றவர்களின் வெற்றியைக் கண்டு மிகவும் பொறாமைப்படுவார்கள். அவர்களால் தங்களைத் தவிர வேறு யாரும் வெற்றி பெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
கன்னி ராசிக்காரர்கள் மிகவும் அன்பானவர்கள் என்றாலும், சில சமயங்களில் அவர்களும் பொறாமைக்கு ஆளாகிறார்கள். யாராவது அவர்களை மிஞ்சும் வகையில் இருக்கும் போது அவர்களுக்கு இந்த உணர்வு ஏற்படுகிறது.
ரிஷபம் ராசிக்காரர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள், உழைப்பின் முழுப் பலன் கிடைக்காதபோது அவர்களுக்குள் பொறாமை உணர்வு ஏற்படும். அவர்கள் மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டு தங்கள் அதிர்ஷ்டத்தை நினைத்து நொந்து கொள்வார்கள். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)