Shani Ast: இன்னும் சில நாட்களில் சனி அஸ்தமனம் நடக்கவுள்ளது. இதனால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்? எந்த ராசிகள் பிரச்சனைகளைச் சந்திப்பார்கள்? முழு ராசிபலனை இந்த பதிவில் காணலாம்.
Sani Peyarchi Palangal: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி பெயர்ச்சி ஆகவுள்ளார். சனி பெயர்ச்சிக்கு முன்னதாக பிப்ரவரி 28ஆம் தேதி சனி அஸ்தமனம் நிகழவுள்ளது. சனி 37 நாட்கள் அஸ்தமன நிலையில் இருப்பார். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் சனி அஸ்தமனத்தின் தாக்கம் எப்படி இருக்கும்? சனி அஸ்தமன ராசிபலனை இங்கே பார்க்கலாம்.
மேஷம்: சனி அஸ்தமனத்தின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்களின் சமூக உறவுகள் மற்றும் நிதி நிலைமை பாதிக்கப்படலாம். பண வரவு தாமதமாகலாம். சனி பகவானின் அஸ்தமனத்தால், சிறந்த தொழில் வாய்ப்புகள் கிடைக்காமல் போகலாம்.
ரிஷபம்: சனி பெயர்ச்சிக்கு முன் வரும் சனி அஸ்தமனத்தால், தொழில் வளர்ச்சியில் தாமதம் ஏற்படலாம். அரசாங்க வேலைகளில் இருப்பவர்கள் இந்த நேரத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் முதலாளி அல்லது உயர் அதிகாரிகளுடன் மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது. எனினும் இந்த நேரத்தில் நிதி நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
மிதுனம்: சனி பகவானின் அஸ்தமன நிலையில், மிதுன ராசிக்காரர்கள் பயணம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் தந்தையின் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது. உயர்கல்விக்காக திட்டமிடும் நபர்களுக்கு பணிகள் முடிவடைவதில் சிறு தாமதம் ஏற்படலாம்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சனி அஸ்தமனம் நல்ல பலன்களை அளிக்கும். மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது.
சிம்மம்: காதல் உறவிலோ அல்லது தொழில் கூட்டாளியுடனோ தகராறு ஏற்படலாம். தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு சில சிக்கல்கள் ஏற்படலாம். எந்தவொரு புதிய முடிவையும் கவனமாக பரிசீலித்த பிறகு எடுங்கள். இப்போது முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.
கன்னி: மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தொழிலில் சூழ்நிலை திருப்திகரமாக இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வுக்காக நம்பிக்கையுடன் இருப்பார்கள், ஆனால் வெற்றிக்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும். எனினும் சில நாட்களுக்கு பிறகு அனைத்து விஷயங்களிலும் சாதகமான மாற்றம் ஏற்படும். செல்வமும் செழிப்பும் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபத்தையும் காணக்கூடும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை அனுபவிப்பீர்கள். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
துலாம்: குழந்தைகளுடனான உறவுகளிலும் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். நட்பு மற்றும் சமூக உறவுகளிலும் பிரச்சினைகள் இருக்கலாம். கடன் வாங்கி இருந்தால், தவணையை சரியான நேரத்தில் செலுத்துங்கள். ஆனால், கடன் வாங்குவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்: சனி பெயர்ச்சிக்கு முன் வரும் சனி அஸ்தமனம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கும். உடல்நலமும் மோசமடையக்கூடும். வீடு, வாகனம் வாங்குவதை தள்ளிப்போடுவடுவது நல்லது. பல இன்னல்கள் இருந்தாலும், அனைத்தையும் சாமர்த்தியத்துடன் எதிர்கொள்வீர்கள். அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது.
தனுசு: சனி அஸ்தமனம் தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். சகோதர சகோதரிகளிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். உங்கள் பணி பாராட்டப்படும். நீண்ட பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். இதனால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
மகரம்:சனி அஸ்தமனத்தின் தாக்கத்தால் குடும்பத் தொழிலில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சச்சரவுகள் அதிகரிக்கக்கூடும். நிதி இழப்பும் ஏற்படலாம். சனி பகவானின் பார்வை எட்டாவது வீட்டின் மீது விழுவதால், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.
கும்பம்: சனி பெயர்ச்சிக்கு முன் வரும் சனி அஸ்தமனத்தால் உடன்பிறந்தவர்களுடனான உறவுகள் பாதிக்கப்படும். திருமணத்தில் பிரச்சினைகள் இருக்கலாம். அலுவலக பணிகளில் உள்ளவர்கள் பணியிடத்தில் அதிக வேலை அழுத்தத்தை உணரக்கூடும். உடல்நிலையிலும் சரிவு ஏற்படலாம். வியாபாரத்தில் நிதானம் தேவை.
மீனம்: சனி அஸ்தமனத்தின்ன் தாக்கத்தால் மீன ராசிக்காரர்கள் சில சிக்கல்களை சந்திக்க வேண்டி வரலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நிதி இழப்பு ஏற்படக்கூடும். கடன் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சம்பள உயர்வில் தாமதல் ஏற்ப்படலாம். ஆன்மீகத்தில் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.