Guru Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்கு அதிக லாபம்? எந்த ராசிக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்? அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.
Guru Peyarchi Palangal: சுப கிரகமாக உள்ள குரு பகவான், கல்வி, பண வரவு, செல்வம், திருமண வாழ்க்கை, குழந்தைகள், புகழ் என பல வித சுப விஷயங்களுக்கு காரணி கிரகமாக இருக்கிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருந்தால், அந்த நபர் செல்வம், கௌரவம், மரியாதை உட்பட அனைத்து நல்ல அம்சங்களையும் பெற்று நல்வாழ்க்கை வாழ்கிறார். 2025 ஆம் ஆண்டில், மே 15 ஆம் தேதி குரு இரவு 10:36 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் அதிக பலன் அடையப்போகும் ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
அனைத்து கிரகங்களிலும் சனி பகவானுக்கு அடுத்தபடியாக மெதுவாக நகரும் கிரகமாக குரு பகவான் இருக்கிறார். தேவகுரு வியாழன் சுமார் 13 மாதங்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார்.
குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் உள்ளார். 2025 ஆம் ஆண்டில், மே 15 ஆம் தேதி குரு இரவு 10:36 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் மிக அதிக நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் அனைத்து சோதனைகளையும் தாண்டி சாதனை செய்வார்கள். நிதி நிலை வலுப்பெறும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சுபமான பலன்களை அளிக்கும். வெளிநாட்டு பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். கல்வி, வேலை, வியாபாரத்தில் சிறந்து விளங்குவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தைகளால் நன்மை உண்டாகும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். குருவின் ராசி மாற்றத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் கூடும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கலாம். குழந்தைகளால் நன்மை உண்டாகும்.
மிதுனம்: குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு புதிய வணிக ஒப்பந்தத்தை உறுதி செய்யக்கூடும். குரு அருளால் லாபம் பெருகும். பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இவற்றால் அனுகூலமான நன்மைகள் உண்டாகும். ஆன்மீக பயணங்களையும் மேற்கொள்வீர்கள். திருமணத்திற்காக காத்திருக்கும் நபர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். குழந்தை செல்வம் கிடைக்கும்.
கடகம்: குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். அலுவலகம் மற்றும் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குழந்தை வரம் கை கூடும். அனைத்து வேலைகளிலும் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும்.
சிம்மம்: சிம்ம ராசிக்கு 2025 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பழைய முதலீடுகளிலிருந்து இப்போது லாபம் கிடைக்கு.ம். குரு பெயர்ச்சி காலத்தில் சிம ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறலாம்.
துலாம்: துலா ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அதிகப்படியான நன்மைகளை அளிக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளை பெறுவீர்கள். பதவி உயர்வும் ஊதிய ஊயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
குரு பகவானின் பரிபூரண அருளைப் பெற, 'குரு பிரம்மா குரு விஷ்ணு, குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா, தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ' என்ற ஸ்லோகத்தையும் 'குரவே சர்வ லோகானாம், பீஷஜே பவரோகினாம்; நிதயே சர்வ வித்யானாம், தக்ஷிணாமூர்த்தயே நமஹ' என்ற ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்யலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.