கங்குவா இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின்-விஜய் குறித்து பேசிய சூர்யா!! என்ன சொன்னார்?

Kanguva Audio Launch Suriya Speech About Udhayanidhi Stalin Vijay: கங்குவா இசை வெளியீட்டு விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. இதில் சூர்யா, உதயநிதி மற்றும் விஜய் குறித்து பேசினார். 

Kanguva Audio Launch Suriya Speech About Udhayanidhi Stalin Vijay: சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், கங்குவா. இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடித்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான அளவில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சூர்யா பேசிய விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1 /12

கங்குவா இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இதில் சூர்யா பேசிய விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் அப்படி என்ன பேசினார்?

2 /12

கங்குவா படத்தில் போஸ் வெங்கட் நடித்திருக்கிறார். இவர், நேற்றைய விழாவில் பேசும் போது   “ஒரு ஸ்டாராக இருப்பவர் தனது ரசிகர்களை நல்வழியில் நடக்க ஊக்குவிக்க வேண்டும், பிறருக்கு மரியாதை கொடுக்க கற்றுக்கொடுக்க வேண்டும், பிறருக்கு கல்வி கொடுக்க வேண்டும், எது நல்லது எது கெட்டது என தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் அரசியலுக்குள் நுழைய வேண்டும்.” என்று கூறினார். மேலும், அதை நடிகர் சூர்யா சரியாக செய்து வருவதாகவும் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என்றும் கூறினார். 

3 /12

தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலின் குறித்து நடிகர் சூர்யா நேற்றைய விழாவில் பேசினார். அவர் தனக்கு கல்லூரியில் ஒரு வருடம் ஜூனியர் என்று குறிப்பிட்ட அவர், இருவரும் “பாஸ்” என்று ஒருவரை ஒருவர் செல்லமாக அழைத்துக்கொள்வோம் என்றும், அவரது அரசியல் பயணத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் கூறினார். 

4 /12

உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசி முடித்தவுடன் நடிகர் சூர்யா விஜய் குறித்து பேச ஆரம்பித்தார். “இன்னொரு நண்பர் இருக்கிறார். புதிய பாதை போட்டு புதிய பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். அவரது வரவும் நல்வரவாக இருக்கட்டும்” என்று கூறினார். 

5 /12

ஆர்.ஜே.பாலாஜி “சூர்யா ஏற்கனவே அரசியல்வாதிதான்” என்று பேசினார். மேலும் “அரசியல்வாதி என்பது தேர்தலில் நிற்பவர் மடுமல்ல, பிறருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று சின்ன சின்ன செயல்கள் செய்யும் அனைவருமே அரசியல்வாதிகள்தான். அந்த வகையில் சூர்யா சார் அரசியல்வாதியாக மாறி ரொம்ப வருடங்கள் ஆகிறது” என்று கூறினார். 

6 /12

விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் போஸ் வெங்கட் அவரை அட்டாக் செய்து பேசியதற்கு சூர்யா மாஸாகவும் ஸ்மார்ட் ஆகவும் பதிலளித்துள்ளது குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர். 

7 /12

நடிகர் சிவகுமார் கங்குவா பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, சூர்யாவை பி.காம் படிப்பில் சேர்க்க எவ்வளவு சிரமங்களை மேற்கொண்டார் என்பதைக்கூறிய அவர், கடைசி ஆண்டில் 4 அரியர் வைத்ததாக தனது மகனை கலாய்த்தார். 

8 /12

கங்குவா பட விழாவிற்கு பல ஆயிரம் பேர் வந்தனர். அதில் ஒரு குழுவினருடன் செல்ஃபி எடுத்த சூர்யா

9 /12

கங்குவா பட விழாவிற்கு திஷா பதானி வந்திருந்தார். அவர்தான் இந்த படத்தின் நாயகி. 

10 /12

சூர்யா, திஷா பதானி, தேவி ஸ்ரீ பிரசாத், சிவா, நட்ராஜ், பாபி டியோல் உள்ளிட்ட கங்குவா படக்குழுவினர் செல்ஃபி எடுத்த காட்சி

11 /12

கங்குவா படத்தில், பாபி டியோல் வில்லனாக நடித்திருக்கிறார். இவரைக்கட்டிப்பிடித்து வரவேற்ற சூர்யா. 

12 /12

திஷா பதானி, சூர்யாவுடன் இணைந்து இப்படத்தில் ஆனந்த் ராஜ், நட்ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படம், வரும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி வெளியாகிறது.