Kalaingar Magalir Urimai Thogai | கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் செய்யப்படும்போது எத்தனை பேருக்கு கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Kalaingar Magalir Urimai Thogai Scheme Expansion | தமிழ்நாடு அரசு விரைவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை(Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்தை விரிவாக்கம் செய்ய உள்ள நிலையில், இதில் எத்தனை பேருக்கு புதிய பயனாளிகளாக சேர்க்கப்படுவார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..
தமிழ்நாடு அரசு முன்னோடி திட்டமாக இந்தியாவிலேயே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை (Kalaingar Magalir Urimai Thogai) செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தைப் பார்த்து இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் இந்த திட்டம் இப்போது செயல்படுத்தப்படுகிறது.
அவர்களும் இந்த திட்டத்தில் சேர விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கான குட் நியூஸ் என்னவென்றால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதாவது இந்த திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர்.

இது தொடர்பான அறிவிப்பு அதிகபட்சம் வரும் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு ஏற்கனவே விரிவான ஆலோசனை நடத்தியிருக்கிறது.
அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவது ஏறத்தாழ உறுதி. இருப்பினும் எத்தனை பேர் புதிய பயனாளிகளாக சேர்க்கப்படுவார்கள் என்ற கேள்வி இருக்கிறது. அண்மையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகாக இருந்த தகுதியற்ற மற்றும் மரணம் எய்திய சுமார் 1 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.
அவர்களுக்கு பதிலாக புதிய பயனாளிகளாக சேர்க்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அந்தவகையில் 1 லட்சம் பேர் வரை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்போது பயனாளிகளாக சேருவார்கள். எனவே, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு தேவையான உரிய ஆவணங்களை எல்லாம் தயார் நிலையில் வைத்து அருகில் உள்ள இசேவை மையங்களுக்கு சென்று இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கவும்.
உங்களின் விண்ணப்பம் நிலை குறித்து நீங்கள் ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ளலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் ஏற்கப்பட்டிருந்தாலும், ஏற்கப்படாமல் நிராகரிக்கப்பட்டிருந்தாலும் அது தொடர்பான மெசேஜ் உங்கள் மொபைல் எண்ணுக்கு வந்துவிடும்.
நிராகரிக்கப்பட்டிருந்தால் என்ன காரணத்திற்காக உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த காரணம் தவறு என நீங்கள் நினைத்தால் உங்கள் விண்ணப்பத்தை மேல்முறையீடு செய்யலாம். இதுகுறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து விண்ணப்பம் மீது முடிவெடுப்பார்கள்.