Bhavatharini: ‘மயில் போல பொண்ணு ஒன்னு..’ பவதாரணியின் சிறு வயது புகைப்படங்கள்!

Singer Bhavatharini: பின்னணி பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜவின் மகளுமான பவதாரணி உயிரிழந்துள்ளார். இதையடுத்து இவரது சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Singer Bhavatharini Childhood Photos: பாடகி பவதாரிணி, புற்று நோய் காரணமாக கடந்த ஜனவரி 25ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, இவரது உடல் தேனியில் அடக்கம் செய்யப்பட்டது. 

1 /7

பின்னணி பாடகி பவதாரிணி, இளையராஜாவின் இரண்டாவது மகளாவார். இவர், புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இவரது வயது, 47 ஆகும். தமிழில் தனது தந்தை இளையராஜாவின் இசையிலும், தம்பி யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் பல பாடல்களை பாடியுள்ளார். 

2 /7

பவதாரிணி, சில மாதங்களாகவே கடும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இலங்கையில் உள்ள கொலம்புவில் சிகிச்சை பெற்று வந்த இவர், கடந்த 25ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ரசிகர்களும் திரையுலகமும் சோகத்தில் ஆழ்ந்தது. 

3 /7

மயில் போல பொண்ணு ஒன்னு, ஆத்தாடி ஆத்தாடி, தாலியே தேவ இல்ல போன்ற பல ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் பவதாரிணி. 

4 /7

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனக்கு இசை கற்றுக்கொடுத்ததே தனது அக்காதான் என ஒரு மேடையில் கூறியிருந்தார். இவர் மட்டுமன்றி, பவதாரிணி பழகுவதற்கும் பேசுவதற்கும் மிகவும் இனிமையானவர் என்று பலர் கூறியுள்ளனர். 

5 /7

பவதாரிணி இறந்த அன்று, அவரது தந்தை இளையராஜா ‘அன்பு மகளே’ என்று கூறி அவரது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். 

6 /7

பவதாரிணி, தான் சிகிச்சைக்காக இலங்கைக்கு செல்வதற்கு முன்னர் தனது குடும்பத்தினரை சந்தித்து நேரம் செலவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொடுத்து அவர்களை சர்ப்ரைஸ் செய்தாராம். 

7 /7

பவதாரிணியின் சிறு வயது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.