கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வரவில்லையா? இந்த எண்களில் புகார் தெரிவிக்கலாம்

Pudhumai Penn scheme | புதுமை பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை கிடைக்கவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் பட்டியல் இங்கே 

Pudhumai Penn scheme News Tamil | அரசுப் பள்ளிகளில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் பெண் குழந்தைகளின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 

1 /8

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி “புதுமைப் பெண் திட்டம்”  என்ற இத்திட்டத்தின் மூலம், நிதி உதவியாக ரூ. யுஜி பட்டப்படிப்பு/டிப்ளமோ/ஐடிஐ/ வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட படிப்பை முடிக்கும் வரை பெண்களுக்கு மாதம் 1000 வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை நேரடியாக மாணவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

2 /8

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவியர், பொருளாதார சிக்கல்களின் காரணமாக 12ஆம் வகுப்பு முடிந்தவுடன் கல்வியை தொடர முடியாமல் போகிறது. எனவே, இந்த மாணவிகளின் கல்வி தடைபடாமல், அவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

3 /8

6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளாக இருத்தல் அவசியம். அரசுப் பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய இயலும்.

4 /8

இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் RTE மூலமாக 6-ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை தமிழக தனியார் பள்ளியில் பயின்ற மாணவியர், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றால் இத்திட்டம் மூலம் பயனடைய முடியும். கலை, அறிவியல், தொழில்முறை படிப்புகள், துணை மருத்துவம், டிப்ளமா, ITI, இளநிலை மற்றும் முதுநிலை இணைந்த படிப்புகள் ஆகியவற்றில் மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவியருக்கு, அப்படிப்புக்கான உதவித்தொகையாக மாதம் ரூ. 1000 வழங்கப்படும்.

5 /8

ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவியர் இருந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறலாம். கல்லூரியில் சென்று பயிலும் மாணவியருக்கே இந்த உதவித்தொகை வழங்கப்படும். அஞ்சல்வழிக் கல்வி அல்லது அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலாது.

6 /8

வேறு திட்டங்களின் கீழ் நிதியுதவி பெறும் மாணவியரும் கூடுதலாக இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலும் என்பது இந்த திட்டத்தின் சிறப்பம்சம் ஆகும். ஏற்கெனவே உயர்கல்வியில் சேர்ந்த மாணவியரும், மீதமிருக்கும் ஆண்டுகளுக்கான படிப்பிற்கு இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.  

7 /8

இத்திட்டத்திற்கென புதிய மறுசீரமைக்கப்பட்ட வலைதளம் (https://www.pudhumaipenn.tn.gov.in) உருவாக்கப்பட்டுள்ளது. மாணவியர்கள் தாங்கள் உயர்கல்வி பயிலும் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளரைக் கொண்டு இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்திட இயலும்.  

8 /8

கல்லூரியில் படிக்கும் மாணவிகள் தங்களுக்கு உதவித் தொகை கிடைக்கவில்லை என்றால் இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்களை தொடர்பு கொண்டு புகார் அல்லது கூடுதல் விவரங்களை மாவட்ட வாரியாக கேட்டு தெரிந்து கொள்ளலாம்.