Guru Peyarchi Palangal: சுப பலன்களை அள்ளிக்கொடுக்கும் கிரகமான குரு பகவான் இன்று பெயர்ச்சி ஆகிறார். அனைத்து ராசிகளுக்கும் குரு பெயர்ச்சியின் தாக்கம் எப்படி இருக்கும் என இங்கே காணலாம்.
Guru Peyarchi Palangal: கல்வி, திருமணம், புத்திசாலித்தனம், குழந்தைகள், பணம், செல்வச் செழிப்பு ஆகியவற்றுக்கு காரணி கிரகமாக உள்ள குரு பகவான் இன்று மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகிறார். இந்த குரு பெயர்ச்சி இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் அனைத்து 12 ராசிகளிலும் ஏற்படவுள்ள மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்காரர்கள் தங்கள் துறையில் சிறப்பாக செயல்படுவார்கள். இவர்களுடைய ஆளுமை மேம்படும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்க மகிழ்ச்சியாக இருக்கும்.
ரிஷபம்: குரு பெயர்ச்சி ரிஷபத்தில் தான் நடக்கிறது. ஆகையால் இவர்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படும். புதிய வாகனம் அல்லது வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்வீர்கள். குரு பெயர்ச்சிக்கு பிறகு வங்கிக் கடனின் சுமை குறையத் தொடங்கும், ஏனெனில் உங்கள் நிதி நிலைமை மேம்பட்டு கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்குவீர்கள்.
மிதுனம்: குரு பெயர்ச்சி மிதுன் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படலாம். இந்த நேரத்தில், நீங்கள் புதிய வேலைகளை தொடங்கலாம். அவற்றில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.
கடகம்: குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். வாழ்க்கைத் துணையுடன் அன்பும் புரிதலும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.
சிம்மம்: குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு லாபத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணி நிமித்தமாக பல பயணங்களை மேற்கொள்வீர்கள். இதனால் அனுகூலமான நன்மைகள் கிடைக்கும். இந்த நேரம் உங்களுக்கு மங்களகரமானதாக இருக்கும்.
கன்னி: உடல் மற்றும் மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அலுவலகத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை அளிக்கும். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு இப்போது கிடைக்கும்.
துலாம்: வியாபாரம் செய்யும் துலா ராசிக்காரர்கள் அதிக ஆதாயம் அடைவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவதில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். வாழ்வில் முன்னேற அதிக வாய்ப்புகள் கிடைக்கும். வாகனம், சொத்து வாங்கும் யோகம் உருவாகும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிகப்படியான வருமானத்தைப் பெறுவார்கள். பண வரவு நன்றாக இருக்கும். பொறுமையுடன் அனைத்து பணிகளையும் செய்தால் அனைத்திலும் வெற்றி காணலாம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
தனுசு: குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டில் படிக்கும் எண்ணம் உள்ளவர்களுக்கும், உயர்கல்வி பெற நினைப்பவர்களுக்கும் நேரம் சாதகமாக உள்ளது. இந்த காலத்தில் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். சட்ட சிக்கல்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகமாகும். செலவுகளும் அதிகமாக இருக்கும். பொருளாதார நிலை முன்னெறும். உடல் ஆரோக்க்கியம் நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் உண்டாகும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் அருளால் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். பணி இடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். குடும்ப சூழல் நன்றாக இருக்கும்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.