'தீபாவளி' பட்டாசு வெடிக்கும் மக்களின் கவனத்திற்கு !

தீபாவளி ஒட்டுமொத்த இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகை இது. சிறப்பாக தீபாவளின் எதற்கு கொண்டாடப்படுகின்றோம் என்பதுக் குறித்த வரலாற்றை நாம் கேட்டிருப்போம்.இந்த தீபாவளி இனிய நாளில் மக்கள் பாதுகாப்பானப் பண்டிகையை உறுதிப்படுத்தும் வகையில் ரயில்வே துறை மற்றும் காவல் துறை மக்களுக்கு சில எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுக் குறித்த முழு விவரத் தொகுப்பை இங்குப் பார்போம்.

 

1 /8

தீபாவளி பண்டிகை ஆபத்தைத் தவிர்த்து இனிய தீபாவளியைக் கொண்டாட சில அறியுரைகள் ரயில்வே துறை மற்றும் காவல் துறை வழங்கியுள்ளது.

2 /8

வெளியூர்களில் இருந்து வேலைப் பார்த்துவருபவர்கள் தீபாவளி வரும் முன் மாதம் ரயில் டிக்கெட் பதிவு செய்துவிடுவீர்.மேலும் சிலர் தீபாவளி அன்று பட்டாசுப் போன்றவற்றை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல முற்படுவீர்கள். நீங்கள் பட்டாசு போன்ற தீப்பற்றக் கூடியப் பொருட்கள் ரயிலில் எடுத்து செல்வதை தவிர்த்துவிடுங்கள்.

3 /8

தீபாவளி கொண்டாடும் ஆர்வத்தில் விதியை மீறி  தவறு அல்லது விதிமீறி செயல்பட்டால் ரயில்வே துறை மற்றும் காவல் துறை முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என முன்பாகவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

4 /8

ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் ரயில் படிகட்டில் அமர்ந்து பயணம் செய்வதை தவிர்த்துவிடுங்கள், மேலும் எச்சரிக்கையை மீறி பயணம் செய்தால் சட்டத்தின்படி கைது செய்து அபராதம் விதிக்கபடும் என அறிவித்துள்ளது.  

5 /8

தீபாவளி பண்டிகை இனிய நாளில் ஆபாத்தை உணராமல் பயணம் செய்து விபத்து ஏற்படுவதைவிட ஆபத்தை நல்லமுறையில் தடுப்பதே சிறந்தது.இந்த வகையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அமோகமாக பட்டாசு விற்பனையாகி வருகிறது.  

6 /8

தீபாவளி பண்டிகை வந்தாலே அனைவரின் நினைவுக்கு வருவது பட்டாசு, வீட்டில் தீபாவளி முன்வாரமே பட்டசு வாங்கி குவித்துவிடுவோம்.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் பல்வேறு விதத்தில் தீபாவளி கொண்டாடுவர். 

7 /8

தீபாவளியில் ஒருபெரிய சிக்கல் என்னெவென்றால் மக்கள் பட்டாசு அளவிற்கு மீறி வெடித்து மாசுப்படுத்துகின்றனர்.இதனால் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கப்பட்டுள்ளது.

8 /8

தீபாவளி பண்டிகையில் அதிக விபத்துகள் நடக்க நேரிடும். எனவே மக்கள் பாதுக்காப்பாக வீட்டில் அனைவருடன் சந்தோஷமாக தீபாவளி கொண்டாட காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.