காதலனை எப்பவும் உங்களையே நினைச்சுகிட்டே இருக்கணுமா... இந்த 5 டிப்ஸை பாருங்க

Relationship Tips In Tamil: காதல் உறவில் உங்கள் பார்ட்னர் எப்போதும் உங்கள் நினைப்பாகவே இருக்க வேண்டும் என்றால் நீங்கள் இந்த 5 விஷயங்களை செய்ய வேண்டும். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம். 

காதல் உறவோ, திருமண உறவோ அது பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி எப்போதும் முதல் அடியை எடுத்துவைக்க தயங்கவே கூடாது. காதல் உறவில் அன்பு செலுத்த முந்துவதே ஆரோக்கியமான ஒன்றாகும்.
 
 
1 /8

காதலனோ, காதலியோ 'என்னைப் பற்றி நினைப்பதையே குறைத்துவிட்டார்கள்', 'காதலித்த புதிதில் இருந்ததை  விட இப்போது ஆர்வம் குறைந்துவிட்டது' என பலர் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  

2 /8

இந்த காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் படிப்பு சார்ந்த அழுத்தம், பணி சார்ந்த அழுத்தம், குடும்பம் சார்ந்த அழுத்தம் என பல அழுத்தங்கள் உள்ளதால் காதல் வாழ்வை அலட்சியமாக விட்டுவிடுகின்றனர்.   

3 /8

அப்படியிருக்க, என்ன அழுத்தம் இருந்தாலும் காதல் உறவில் உங்கள் பார்ட்னர் அலட்சியம் காட்டாமல் உங்கள் நினைப்பாகவே இருக்க இந்த 5 டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.   

4 /8

எப்போதும் உங்கள் பார்ட்னர் உடன் பேசும்போது கண் பார்த்து பேசுங்கள். நீங்கள் அவர்களுடன் கண் மூலமாக தொடர்பில் இருந்தால் எப்போதும் உங்கள் முகமே அவருக்கு முதலில் ஞாபகத்திற்கு வரும். ஏதாவது அழுத்தம் வந்து ஆறுதல் தேவைப்பட்டால் கூட அவர்களுக்கு உங்கள் நினைப்பே முதலில் வரும். 

5 /8

தினமும் ஒரு நேரத்தைக் குறித்துவைத்துக் கொண்டு அதில் சரியாக மெசேஜ் செய்வதையோ, கால் செய்வதையோ வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். அதாவது, காலை 7 மணிக்கு காலை வணக்கம் என்றோ, தூங்கச் செல்லும் முன் மொபைலில் பேசுவதும் உங்களை அவரின் நினைவிலேயே வைத்திருக்க உதவும்.   

6 /8

அதேபோல், அவர் வேலையில் இருக்கும்போதோ அல்லது தவறான நேரங்களிலேயோ கால் செய்து பேச தொந்தரவு செய்யாதீர்கள். ஏனென்றால் அவரை தொந்தரவு செய்தால் அவருக்கு எரிச்சல் ஏற்பட்டு உங்களை அலட்சியப்படுத்த தோன்றலாம். எனவே, நீங்கள் எப்போது பேசுவீர்கள் என்ற ஆர்வத்தை வளர்ப்பதும் அவரை உங்கள் நினைப்பாகவே வைத்திருக்கும்.   

7 /8

நேரில் பேசும்போது அடிக்கடி உங்கள் பார்ட்னரிடன் தோள்களை தொட்டு அன்போடு பேசுங்கள். கையை பிடித்து பேசுவது, தோள்களில் சாய்ந்துகொண்டு பேசுவது உங்களின் உறவை நெருக்கமாக்குவது மட்டுமின்றி உங்களின் ஸ்பரிச்சதிற்கு அவர் ஏங்கும் நிலையும் ஏற்படும். இதனால் அவர் உங்களை நினைவிலேயே வைத்திருப்பார்.   

8 /8

அதேபோல், உங்கள் பார்ட்னர் பேசும்போதோ, புலம்பும்போதோ, கவலைகளை பகிர்ந்துகொள்ளும்போதோ, அனுபவங்களை சொல்லும்போதோ அவற்றை அசட்டையாக கவனிக்காமல் காது கொடுத்து கேளுங்கள். நீங்கள் காது கொடுத்து கேட்டால் அவர் உங்களிடம் தொடர்ந்து பேச வேண்டும் என நினைப்பார், எப்போதும் உங்களையே நினைத்துக் கொண்டும் இருப்பார்.