இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தல் அவ்வளவு நன்மைகளா? அப்படி என்ன ஜூஸ்?

கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். 

கற்றாழை ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அவ்வளவு நன்மைகள் உள்ளதாம். கற்றாழை உச்சந்தலை முதல் பாதம் வரையான பராமரிப்புகளுக்கு உதவுகிறது. இப்படியான கற்றாழையின் நன்மைகள் குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம். 

1 /7

கற்றாழையை நமது வீட்டினுள்ளேயே வளர்க்கலாம். ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பன்புகள் இந்த கற்றாழையில் நிரம்பி உள்ளன. இந்த கற்றாழையை சாறாக்கி காலை எழுந்த உடன் வெறும் வியிற்றில் குடிக்கலாம். இது நமது உடல் உஸ்னத்தை குறைக்கிறது. இருமல் சளி, கண் எரிச்சல், வயிற்றின் எரிச்சல் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு கற்றாழை தீர்வாகிறது. 

2 /7

வெயில் காலத்தில் கண்களில் எரிச்சல் உண்டாகி கண்கள் சிவந்து விடும். அப்போது கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் உள் பகுதியில் உள்ள நுங்குப் பகுதியை எடுத்து கண்கள் மீது வைத்து சற்று நேரம் படுத்திருந்தால் இந்த கண் எரிச்சல் சரி ஆகும். 

3 /7

நீர்க்கடுப்பு, வயிற்று எரிச்சல் உள்ள நேரங்களில் கற்றாழை சோற்றுடன் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து உட்கொள்ளலாம். அப்படி உட்கொள்வதால் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும். 

4 /7

பாதம் மிகவும் சுடாக எரிச்சலாக இருந்தாலும் கற்றாழையின் சோற்றை எடுத்து பாதத்தில் தடவலாம். அப்படி தடவினால் இந்த எரிச்சல் நீங்கும். 

5 /7

கற்றாழை சோற்றை முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். கற்றாழை நமது சருமத்தை பாதுக்காப்பதுடன் தலைமுடியையும் வளர்க்க உதவுகிறது. இதனை தேங்காய் எண்ணெயுடன் கலந்து வெயிலில் வைத்து தலையில் தேர்த்து வந்தால், தலைமுடி நன்கு வளரும்.   

6 /7

கற்றாழை ஜெல் - 5 டீஸ்பூன் (நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்), இனிப்புக்கு தேன், எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன். இதனை ஒரு டம்ளர் நீரில் நன்றாக கலந்து குடிக்கவும். 

7 /7

கற்றாழை ஜெல் - 5 டீஸ்பூன், மோர் - ஒரு டம்ளர், ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சீரகம், பெருங்காயம் 2 சிட்டிகை. இதனை நன்றாக கலந்து குடிக்கவும்.  (பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)