உடல் எடையை வேகமாக குறைக்க சிறந்த உடற்பற்சிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
நம்மில் பலர் தங்ககளின் உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. அவர்களுக்கு உதவும் சில உடற்பயிற்சி குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.
உங்கள் அன்றாட வாழ்க்கையின் சில பழக்கங்களுடன் நடைப்பயிற்சியையும் இணைத்துக்கொள்வது என்பது மிக அவசியமாகிறது. தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உடல் எடை வேகமாக குறையும்.
வாரத்தில் 5 நாட்களில் 60 நிமிடங்கள் கார்டியோ உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து செய்யும் பட்சத்தில் உடல் எடையானது வேகமாக குறையும்.
மேலே கூறப்பட்ட உடற்பயிற்சி உடன் அவ்வபோது சைக்கிள் ஓட்டுதல் அவசியம். ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டினால் சுமார் 400 - 750 கலோரிகளை எரிக்கிறது. எனவே வேகமாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சைக்கிள்
அவ்வபோது நீச்சல் செய்வதன் மூலம் நமது ஓட்டுமொத்த உடலையும் சீராக வைத்துக்கொள்ள முடியும். நீச்சல் செய்யும் போது நமது மூச்சுத்திறன் மேம்படுகிறது. அதோடு நமது உடலில் உள்ள தேவையில்லாத கொலுப்புகளை கரைக்கிறது. எனவே இதனை மேற்கொள்ளும் பட்சத்தில் உடல் எடை வேகமாக குறையும்.
நீட்சிகள் தினமும் செய்யும் போது உங்கள் உடல் தசைகள் உடற்பயிற்சிக்கு தயாராக தொடங்கும். அதனால் தான் விளையாட்டு வீரர்கள் அனைவரும் விளையாட்டில் ஈடுபடுவதற்கு முன்பாக வார்ம் அப் மற்றும் கூல் டவுன் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்வார்கள். கடுமையான உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு நீட்சிகளை செய்ய வேண்டும்.
உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது. ஆரோக்கியமான உணவும் தேவை. இவை இரண்டையும் சேர்த்து செய்தால் மட்டுமே வேகமாக உடல் எடை குறையும். பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.