பிரதீப் ரங்கநாதனுடன் டிராகன் படத்தில் நடித்த கயாடு லோஹர் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறார். அவரது பழைய ரீன்ஸ் மற்றும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான டிராகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் கயாடு லோஹர்.
இந்த படம் வெளியானதில் இருந்து இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது. சமூக வலைத்தளங்களில் இவரது வீடியோக்கள் தான் ட்ரெண்டிங்கில் உள்ளது.
அஸ்ஸாமின் தேஜ்பூரில் பிறந்து வளந்த கயாடு லோஹர் தற்போது புனேவில் வசித்து வருகிறார். B.Com படித்துள்ள இவர் மாடலிங் துறையில் இருந்த ஆர்வத்தால் தற்போது கதாநாயகி ஆகி உள்ளார்.
கயாடு லோஹர் 2021ம் ஆண்டு வெளியான முகில்பேட்டே என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பிறகு பதோன்பதம் நோட்டாண்டு என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார்.
அல்லூரி என்ற தெலுங்கு படத்திலும், I பிரேம் யு என்ற மராத்தி படத்திலும் நடித்துள்ளார். அதன் பிறகு தற்போது டிராகன் படத்தில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
அடுத்ததாக தமிழில் அதர்வா முரளி நடிக்கும் இதயம் முரளி படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் கதை கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.