BSNL New Recharge Plan: பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த கட்டணத்தில், அதிக நாள்கள் வேலிடிட்டி உடன் கொண்டுவந்துள்ள புதிய திட்டம் ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களை கதிகலங்கச் செய்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு புதிய வாடிக்கையாளர்களை குவித்து வரும் நிலையில், இந்த புதிய திட்டமும் பல வாடிக்கையாளர்களை ஈர்க்கும் எனலாம். இந்த திட்டம் குறைவான டேட்டா மற்றும் காலிங் வசதியை பயன்படுத்த நினைப்பவர்களுக்கும், OTP சரிபார்ப்புக்கு பயன்படுத்தும் மொபைல் எண்களுக்கும் பெரியளவில் உதவும்.
ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio), வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய தனியார் நிறுவனங்கள் கடந்தாண்டு அவற்றின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியதன் விளைவாக பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நோக்கி நகரத் தொடங்கினர்.
விலை குறைவான ரீசார்ஜ் திட்டங்களை கொண்ட பிஎஸ்என்எல் நிறுவனம் (BSNL) வாடிக்கையாளர்களை ஈர்த்து லாபத்தை அள்ளியது. கடந்த சில மாதங்களில் மட்டும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சுமார் 50 லட்சம் புதிய பயனர்கள் வந்துள்ளனர்.
வாடிக்கையாளர்களின் இந்த போக்கை சமாளிக்க முன்னணி தனியார் நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது யாரும் தடுக்க முடியாத வேகத்தில் சென்று வருகிறது. தற்போது பிஎஸ்என்எல் கொண்டுவந்துள்ள மற்றொரு திட்டமும் அந்த நிறுவனங்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது எனலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனம் 197 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியிருக்கும் (BSNL Rs 197 Recharge Plan) இந்த திட்டத்தின் வேலிடிட்டி என்பது 70 நாள்களாகும். 70 நாள்களுக்கு வெறும் 197 ரூபாயில் ரீசார்ஜ் திட்டம் என்பது தற்போதைய சூழலில் மிகவும் அரிதான ஒன்றாகிவிட்டது.
இந்த திட்டம் பெரும்பாலும் குறைவான டேட்டாவை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும், காலிங் வசதியும் குறைவாக பயன்படுத்துபவர்களுக்கும் உதவும். OTP சரிபார்ப்பு உள்ளிட்ட சில தேவைகளுக்காக நீங்கள் ஒரு நம்பரை பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்யலாம்.
இந்த திட்டத்தில் முதல் 18 நாள்களுக்கு எந்த நிறுவனத்தின் நம்பர்களுக்கு வேண்டுமானாலும் அவுட்-கோயிங் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். அதன்பிறகு அவுட்-கோயிங் இருக்காது. ஆனால், 70 நாள்களுக்கும் இன்-கம்மிங் வசதி இருக்கும்.
இந்த திட்டத்தில் 36 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது முதல் 18 நாள்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படும். அதன்பிறகு டேட்டா கிடைக்காது. வேண்டுமென்றால் டேட்டா Add-On செய்துகொள்ளலாம்.
முதல் 18 நாள்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ்-கள் இலவசமாகும். இதுபோன்ற ரீசார்ஜ் திட்டம் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களில் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.