Dragon vs NEEK : வீக் எண்ட் வசூலில் யார் மாஸ்? பாக்ஸ் ஆஃபிசில் யாரு கிங்?

Dragon Vs NEEK Box Office Collection : பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான டிராகன் படமும், தனுஷ் இயக்கத்தில் உருவான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் ஒரே நாளில் வெளியானது. முதல் வீக் எண்டில் இரு படங்களில் எது அதிக வசூலை பெற்றுள்ளது தெரியுமா?

Dragon Vs NEEK Box Office Collection  : பிப்ரவரி மாதத்தில் இரு பெரிய படங்கள் வெளியாகின. அதில் ஒன்று, டிராகன் இன்னொன்ரு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். லவ் டுடே படம் மூலம் பெரிய ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன், அடுத்து அஷ்வத் மாரிமுத்துவுடன் கைக்கோர்த்த படம்தான் டிராகன். இந்த படம் ரிலீஸான பிப்ரவரி 21ஆம் தேதி, நடிகர் தனுஷ் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் வெளியானது. இந்த படத்தில் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். இந்த இரு படங்களில் எதற்கு அதிக வசூல் வந்துள்ளது என்பதை இங்கு பார்க்கலாமா? 

1 /7

தனுஷ், தனது அக்கா மகன் பவிஷை ஹீரோவாக அறிமுகமாக்கியிருக்கும் படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்தில், பவிஷுடன் பிரியா வாரியர், அனேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துடன் சேர்ந்து வெளியானது, பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம். 

2 /7

டிராகன் திரைப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார். லவ் டுடே படத்திற்கு பிறகு இந்த படத்தில் நடித்திருக்கும் பிரதீப், இதில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

3 /7

டிராகன் படத்தின் மீது இளைஞர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தன. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் இளைஞர்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

4 /7

இரு படங்களுமே, ஒரே நாளில் வெளியானாலும், டிராகன் படத்திற்குதான் ரசிகர்கள் அதிகம் சென்று வருகின்றனர். 

5 /7

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் காமெடி சில இடங்களில் சரியாக வர்க்-அவுட் ஆகாததால் அந்த படத்தை பெரும்பாலான ரசிகர்கள் விரும்பவில்லை.

6 /7

டிராகன் படம், முதல் நாளிலேயே சுமார் ரூ.6 கோடியை வசூலித்ததாக கூறப்பட்டது. அதே போல, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் சுமார் ஒன்றரை கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளியானது.

7 /7

வீக் எண்ட் வசூலிலிலும் இரு படங்களில் எதற்கு அதிக வசூல் என்ற விவரங்களும் வெளியாகியிருக்கிறது.டிராகன் படம் உலகளவில் இதுவரை ரூ.24.95 கோடியை வசூலித்திருப்பதாகவும், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் சுமார் ரூ.4.50 கோடி வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.