சனி பெயர்ச்சி 2025: சட்டென மாறப்போகும் தலைவிதி.... இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் ஆரம்பம்

Sani Peyarchi Palangal: மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சியால் யாருக்கு அதிக லாபம்? எந்த ராசிகள் அதிக பலன் பெறுவார்கள்? சனி பெயர்ச்சி பலன்களை இங்கே காணலாம்.

Sani Peyarchi Palangal: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்களை அளிப்பவர் நீதியின் கடவுளான சனி பகவான். தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் இருக்கும் சனி 2025 மார்ச் மாதம் குரு பகவானின் ராசியான மீன ராசியில் பெயர்ச்சி ஆவார். சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். அவர்கள் வாழ்வில் இந்த ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக திகழும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /11

சனி பகவான் மார்ச் 29, 2025 அன்று கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். மீன ராசி குரு பகவானின் ராசி. குருவின் ராசியில் சனி பெயர்ச்சி இந்த ஆண்டின் விசேஷ ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

2 /11

சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் வாழ்க்கை மற்றும் தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் காணப்படும். இது இந்த ராசியினருக்கு ஒரு பொற்காலமாய் ஜொலிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.  

3 /11

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் சனி பகவானின் ராசி மாற்றத்தால் பல நன்மைகளைப் பெற முடியும். வருமானத்தில் எதிர்பாராத அதிகரிப்பு ஏற்படலாம். நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரிகள் பெரும் லாபம் ஈட்டக்கூடும். ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு திடீரென்று அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். வருமானத்தை அதிகரிக்க பல வாய்ப்புகள் கிடைக்கும். மனம் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும். நிலுவையில் உள்ள பணிகள் நிறைவடையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

4 /11

மிதுனம்: மீன ராசியில் மார்ச் மாதம் நடக்க உள்ள சனி பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகாமனதாக இருக்கும். சனியின் ராசி மாற்றம் வணிகத்தில் லாபம், தொழிலில் முன்னேற்றம் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஆகியவற்றை அளிக்கும். மிதுன ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவும் உதவியும் கிடைக்கும்.

5 /11

துலாம்: சனி பெயர்ச்சி துலாம் ராசிக்கு மங்களகரமானதாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு தங்கள் குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கக்கூடும். செல்வம் பெருகக்கூடும், நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக மாறக்கூடும். முதலீடுகளில் லாபம் இருக்கலாம். எனினும் நன்றாக ஆராய்ந்து முதலீடு செய்வது நல்லது.

6 /11

விருச்சிகம்: சனி பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபகரமான பலன்களை அளிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான பொழுதை அனுபவிப்பீர்கள். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.  

7 /11

மகரம்: மகர ராசிக்காரர்கள் சனிப் பெயர்ச்சியால் சிறப்புப் பலன்களைப் பெறப் போகிறார்கள். இந்த ராசி மாற்றம் அவர்களது தைரியத்தையும் வீரத்தையும் அதிகரிக்கக்கூடும். திடீர் பணவரவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மகர ராசியில் பிறந்தவர்களுக்கு நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் வெற்றிகரமாக நடந்துமுடியும். வேலை மற்றும் தொழிலில் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் அமைதி நிலவும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.

8 /11

ஏழரை சனி: சனிக்கிரக தோஷம் மற்றும் ஏழரை சனியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பரிகாரம் செய்ய திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று அவரை வழிபடலாம். இங்கே அருள் புரியும் சனி பகவானை வழிபடுபவர்களுக்கு சனி தோஷம் நிவர்த்தியாகி, சனி அருளால் நன்மைகள் ஏற்பட்டு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

9 /11

ஏழை எளியவர்களுக்கும் நலிந்த மக்களுக்கும் உதவி செய்பவர்களை சனி பகவான் எப்போதும் சோதிப்பதில்லை. முடிந்த வரை நலிந்த மக்களுக்கும், உதவியை நாடும் மக்களுக்கும் உணவு, உடை போன்று ஏதாவது ஒரு வகையில் தான, தர்மம் செய்வது நல்லது.

10 /11

சனி பகவானின் அருள் பெற, “ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ” என்ற சனி மூல மந்திரத்தை ஜபிப்பதும் நல்ல பலன்களை அளிக்கும். மேலும், 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்தோத்திரத்தையும் தினமும் கூறலாம்.

11 /11

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.