ரஜினிகாந்த் கைவசம் ஜெயிலர், லால் சலாம் படங்கள் உள்ளன.
ஜெயிலர் படப்பிடிப்பு முடிந்துள்ளது. லால் சலாம் படத்தில் கவுரவ தோற்றத்தில் வருகிறார்.
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து லால் சலாம் தயாராகிறது. விஷ்ணு, விஷால், விக்ராந்த் ஆகியோரும் இதில் நடிக்கின்ற னர். ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டு செய்கிறார்.
இந்த படத்துக்கு பிறகு ரஜினி நடிக்கும் புதிய படத்தை ஞானவேல் டைரக்டு செய்கிறார். இது ரஜினிக்கு 170-வது படம். போலி என்கவுண்ட்டர் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாராவதாக வலைதளத்தில் தகவல் பரவி உள்ளது.
இந்த படத்தை முடித்ததும் ரஜினி நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்கிறார். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி பிரபலமானவர்.
தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார். லியோ படத்தின் முழு படப்பிடிப்பும் அடுத்த மாதம் இறுதியில் முடிய இருக்கிறது.
அதன்பிறகு ரஜினி பட வேலைகளை தொடங்க இருக்கிறார். இதில் ரஜினிக்கு வில்லனாக அர்ஜுன் நடிப்பது உறுதியாகி உள்ளது. சமீப காலமாக அர்ஜுன் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். லியோ படத்திலும் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார்.