மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: ஜனவரியில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? ஷாக் இருக்கு!!

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் அதாவது ஜனவரி 2025 இல் ஒரு பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது. ஜனவரியில் அகவிலைப்படியில் இதுவரை இல்லாத அளவு மிகக் குறைந்த அதிகரிப்பு காணப்படலாம்.

7th Pay Commission: 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி, தொழிலாளர் அமைச்சம் வெளியிடும் ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அரசாங்கம் அகவிலைப்படியை மாற்றுகிறது. முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிபப்டையில் ஜனவரி மாத அகவிலைப்படியும் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் தீர்மானிக்கப்படுகின்றன. அதன் படி, 2024 ஆம் ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி தீர்மானிக்கபப்டும்.

1 /11

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. ஜனவரி அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய ஒரு முக்கிய செய்தி வந்துள்ளது. அனால், ஜனவரியில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறதா அல்லது அதிர்ச்சிதான் மிஞ்சுமா என்பதை இங்கே காணலாம்.

2 /11

மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் அதாவது ஜனவரி 2025 இல் ஒரு பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது. ஜனவரியில் அகவிலைப்படியில் இதுவரை இல்லாத அளவு மிகக் குறைந்த அதிகரிப்பு காணப்படலாம். அகவிலைப்படி அதிகரிப்பு கடந்த மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 /11

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி, தொழிலாளர் அமைச்சம் வெளியிடும் ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அரசாங்கம் அகவிலைப்படியை மாற்றுகிறது. முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிபப்டையில் ஜனவரி மாத அகவிலைப்படியும் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் தீர்மானிக்கப்படுகின்றன.

4 /11

அதன் படி, 2024 ஆம் ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி தீர்மானிக்கபப்டும். செப்டம்பர் 2024 வரையிலான தரவுகளின்படி, 2025 ஜனவரியில் ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) 2 முதல் 3 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, மத்திய அரசு ஊழியர்களின் டிஏ 54.49% ஐ எட்டியுள்ளது. இருப்பினும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை.  

5 /11

தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, செப்டம்பர் 2024 க்குள் AICPI குறியீடு 143.3 புள்ளிகளில் உள்ளது. இதன்படி, செப்டம்பர் வரையிலான அகவிலைப்படி 54.49% ஆக உள்ளது. அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான எண்கள் இன்னும் வரவில்லை. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கான எண்கள் இந்த நேரத்திற்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது தாமதமாகி வருகிறது. தற்போதைய போக்கின்படி, 2025 ஜனவரியில் டிஏ மற்றும் டிஆர் மீண்டும் 3% மட்டுமே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 /11

ஜூலை 2024 -இல் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் ஆகியவை 3% அதிகரித்தன. இதைத் தொடர்ந்து தற்போது மொத்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 53% ஆக உள்ளன. ஜனவரி 2025 இல் இது 56% ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

7 /11

தற்போதைய போக்கைப் பார்த்தால், அக்டோபரில் குறியீட்டு எண் 143.6 ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி எண்ணிக்கை 54.96% ஆக உயரும். அதே சமயம் நவம்பரில் இதே டிரெண்ட் நீடித்தால், அகவிலைப்படி படி 144 புள்ளிகளைத் தொடலாம். இதன் காரணமாக, அகவிலைப்படி 55.41% ஆக உயரலாம். டிசம்பர் 2024 வரை, குறியீட்டில் 144.6 புள்ளிகளுக்கான போக்கு காணப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அகவிலைப்படி 55.91% ஆக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

8 /11

டிசம்பர் 2024 -இன் குறியீட்டில் 144.6 புள்ளிகள் எட்டப்பட்டால், அகவிலைப்படி 55.91% ஆக அதிகரித்து, மத்திய அரசு ஊழியர்கள் மீண்டும் 3% டிஏ உயர்வை காண்பார்கள். இதனால் 4% உயர்வுக்கான நம்பிக்கைகள் பின்னடைவை சந்திக்கலாம்.

9 /11

சம்பள உயர்வு: ஊழியர்களின் அடிப்படை ஊதியம் (Basic Salary) ரூ.18,000 ஆகவும், அகவிலைப்படி 56% ஆகவும் இருந்தால், கணக்கீடு இப்படி இருக்கும்: ஜனவரி 2025 முதலான டிஏ: ரூ.18,000 x 56% = ரூ.10,080/மாதம் / ஜூலை 2024 வரையிலான டிஏ: ரூ.18,000 x 53% = ரூ.9,540/மாதம். 3% அதிகரிப்புக்குப் பிறகு சம்பளத்தில் காணப்படக்கூடிய மாற்றம் - மாதத்திற்கு ரூ.540.  

10 /11

மேலே கொடுக்கப்பட்ட சம்பளக் கணக்கீடு மதிப்பீட்டின் அடிப்படையில் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. பிற கொடுப்பனவுகள் மற்றும் ஃபிட்மென்ட் ஃபாக்டர் ஆகியவற்றின் காரணமாக உண்மையான சம்பளம் கணிசமாக வேறுபடலாம். இது அகவிலைப்படியில் உள்ள வித்தியாசத்தை மட்டுமே காட்டுகிறது.

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.