பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தின் முதல் கட்டமாக திங்கள்கிழமை ஜெர்மனி சென்றடைந்தார். ஜெர்மன் அதிபர் ஓலாப் ஷால்ஸ் உடனான இருதரப்பு பேச்சுவார்த்தையை மேற்கொள்கிறார்.ஜெர்மனியில் உள்ள இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியை ஆரவாரத்துடன் மகிழ்ச்சியுடன் அன்பாக வரவேற்றனர். சில குழந்தைகள் பிரதமர் மோடிக்கு ஓவியங்களை வழங்கினர், அதில் பிரதமரும் கையெழுத்திட்டுள்ளார்.
ஐரோப்பா பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் ஐரோப்பா சுற்றுப்பயணம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இத்தகைய சூழ்நிலையில், பிரதமர் மோடியின் பயணம், பிறகாரணங்களுக்காகவும் இந்தியாவிற்கு சிறப்பு வாய்ந்தது.
பிரதமர் மோடியின் ஐரோப்பா சுற்றுப்பயணம் ஏன் சிறப்பு வாய்ந்தது?
1. ரஷ்யா-உக்ரைன் போர்
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடக்கும் போரில் பிரதமர் மோடியின் இந்த பயணத்தை உலகமே உற்று நோக்குகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே அமைதியான தீர்வு காண உலக தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள நாடுகளுக்கு மட்டுமே பிரதமர் மோடி வருகை தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி எந்த நிலைப்பாட்டை எடுக்கிறார் என்பதை உலக நாடுகள் உற்று நோக்கியுள்ளன.
மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் பிரதமர் மோடி ஐரோப்பா பயணம்
2. இந்திய-ஜெர்மன் உறவுகள் வலுப்பெறும்
பயணத்தின் முதல் கட்டமாக, பிரதமர் மோடி பெர்லினில் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் இரு தலைவர்களும் 6வது இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கு இடையேயான ஆலோசனை (IGC) கூட்டத்திற்கு தலைமை தாங்குவார்கள். அப்போது இரு தலைவர்களும் விரிவான இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து பேசவுள்ளனர். பெர்லின் சென்றடைந்ததும் பிரதமர் மோடி ட்விட்டரில், ‘பெர்லின் சென்றடைந்துவிட்டேன். இன்று நான் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் பேசுவேன்; வணிகத் தலைவர்களை சந்திப்பேன். இந்தப் பயணம் இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான நட்புறவை ஆழப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்’ என ட்வீட் செய்திருந்தார்.
3. பிரான்ஸுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் வலுப்படுத்தப்படும்
பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்தின் போது, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகத்திற்கு முழு முக்கியத்துவம் அளிக்கப்படும். பிரான்சில் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பாதுகாப்பு துறை உரவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான உறவு மிக நீண்ட காலமாக தொடர்கிறது. பிரான்ஸ் இந்தியாவிற்கு ஜாகுவார் மற்றும் மிராஜ்-2000 போர் விமானங்களை வழங்கி வருகிறது. இது தவிர, அதிநவீன போர் விமானமான ரஃபேலும் இந்தியா வந்துள்ளது.
4. இந்தியா - டென்மார்க் உறவுகள் வலுப்பெறும்
டென்மார்க்குடனான இந்தியாவின் உறவு எப்போதும் நன்றாகவே உள்ளது. பிரதமர் மோடியின் இந்தப் பயணத்துக்குப் பிறகு, இந்தியா-டென்மார்க் உறவுகள் மேலும் வலுப்படும். டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், இரண்டாவது நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
5. வியாபார உறவுகள் சிறப்பாக இருக்கும்
டென்மார்க் மற்றும் இந்தியா இடையேயான உறவுகள் மேலும் மேம்படும். 2021-22 ஆம் ஆண்டில், இந்தியா மற்றும் டென்மார்க் இடையே ரூ.11428 கோடிக்கும் அதிகமான வர்த்தகம் நடந்துள்ளது. அதே சமயம் ஏப்ரல் 2000 முதல் டிசம்பர் 2021 வரை டென்மார்க் இந்தியாவில் ரூ.5318 கோடி முதலீடு செய்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகள் மேலும் வலுப்பெற உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR