இந்திய-அமெரிக்க மாணவியான ஒன்பது வயது சமேதா சக்சேனா, அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் திறமையான இளைஞர்களுக்கான மையத்தின் (Center for Talented Youth - CTY) ‘உலகின் மிக புத்திசாலி’ மாணவர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். நியூயார்க்கின் பேட்டரி பார்க் சிட்டி பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவர், கடந்த ஆண்டு எட்டாவது வயதில் CTY உலகளாவிய திறமை தேடல் திட்டத்திற்கு தகுதி பெற்ற இளைய மாணவர்களில் ஒருவரானார். 76 நாடுகளில் 15,000 க்கும் மேற்பட்ட மாணவர்களிடமிருந்து மேம்பட்ட மாணவர்களை அடையாளம் காண்பதற்காக ஜான் ஹாப்கின்ஸ் CYT தனது உயர் தர-நிலை சோதனையின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
பல்கலைக்கழகத்தின் செய்திக்குறிப்பின்படி, சமேதா SAT, ACT, பள்ளி மற்றும் கல்லூரி திறன் தேர்வு அல்லது CTY என்னும் திறமை தேடலின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்ட மதிப்பீடுகள் ஆகியவற்றில் தனது விதிவிலக்கான செயல்திறன்களுக்காக அங்கீகரிக்கப்பட்டார். கூடுதலாக, 27 சதவீதத்திற்கும் குறைவாகப் பங்கேற்ற 15,300 மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களின் அடிப்படையில், உயர் அல்லது மதிப்புமிக்க கௌரவங்களைப் பெற்றனர்.
மேலும் படிக்க | NRI: பிரிட்டனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?
"இது ஒரு தேர்வில் எங்கள் மாணவர்களின் வெற்றிக்கான அங்கீகாரம் மட்டுமல்ல, அவர்களின் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மற்றும் அவர்களின் இளம் வாழ்க்கையில் இதுவரை அவர்கள் பெற்றுக் கொட்ண்ட அனைத்து அறிவு திறனுக்கும் ஒரு சல்யூட்" என்று CTY நிர்வாக இயக்குனர் டாக்டர் ஏமி ஷெல்டன் கூறினார். அவர் மேலும் கூறுகையில், "மாணவர்கள் தங்கள் ஆர்வங்களைக் கண்டறியவும், திறமையை மேம்படுத்திக் கொள்ள பலனளிக்கும் மற்றும் செழுமைப்படுத்தும் அனுபவங்களில் ஈடுபடுவதற்கும், அவர்களின் சமூகங்களிலும் உலகிலும் குறிப்பிடத்தக்க விஷயங்களைச் சாதிப்பதற்கும் அந்த திறனைப் பயன்படுத்துவதற்கான அனைத்து வழிகளைப் பற்றி சிந்திப்பது உற்சாகமாக இருக்கிறது." என்றார்
கடந்த ஆண்டு, ஜான் ஹாப்கின்ஸ், இந்திய வம்சாவளி இளம்பெண், நடாஷா பெரியநாயகம், 2021 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் நடந்த தேர்வில் 5 ஆம் வகுப்பு மாணவியாக CTY தேர்வில் பங்கேற்ற பிறகு, உலகின் புத்திசாலியான மாணவி என்று பெயரிட்டார். 13 வயது மாணவவியான இவர் நியூ ஜெர்சியில் உள்ள புளோரன்ஸ் எம் கௌடினர் நடுநிலைப் பள்ளியில் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | டாலர் கனவு படுத்தும் பாடு! அமெரிக்க சட்ட விரோதமாக நுழைய முயன்ற இரு NRI கைது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ