கொரோனா வைரஸ் பாதிப்பால், நிறுத்தப்பட்ட ரஜினிகாந்தின் அண்ணாத்தே படத்தின் அண்ணாத்தே படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் முதல் கட்ட படபிடிப்பு நடைபெற்ற நிலையில், இப்போது சென்னையில் படபிடிப்பு தொடர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
முன்னதாக படப்பிடிப்புக் குழுவினரில் எட்டு உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ரஜினிகாந்தின் அண்ணாத்தே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. உடல் நல காரணங்களை மேற்கோள் காட்டி, நெடுநாட்களாக கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திக்க போவதாக கூறி வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அப்போது அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார்.
மார்ச் 15 முதல் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் எனவும், படத்தின் படப்பிடிப்பை நடத்த தயாரிப்பு நிறுவனம் வலுவான பாதுகாப்பு நெறிமுறைகளை வகுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது. முன்னதாக அரசியலில் நுழைவதாக அறிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth), உடல்நிலை சரியில்லாமல் பின்வாங்கினார். எனவே படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் பாதுகாப்பு நெறிமுறைகள் மிக அதிக அளவில் கடைபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'அண்ணாத்தே' படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது, மேலும் பல பிரபலமான நடிகர்களும் உள்ளனர். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி, கோயெர்ஜ் மரியன் மற்றும் பலர் நடித்துள்ளனர், மேலும் டி இமான் இதற்கு இசையமைக்கிறார். இந்த படம் கிராமப்புறத்தை அடிப்படையாகக் கொண்ட குடும்ப பொழுதுபோக்கு படம் என்று கூறப்படுகிறது.
படபிடிப்பு குழு பெரும்பாலும் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் (EVP film city) படப்பிடிப்பைத் தொடங்கும், அங்கு தயாரிப்பாளர்கள் ஒரு பெரிய அளவில் படபிடிப்பிற்கான செட்டிங்குகளை அமைத்துள்ளனர், அதன் பிறகு படப்பிடிப்பு கோவை மற்றும் பொள்ளாச்சியைச் சுற்றி நடக்கும் என கூறப்படுகிறது.
ALSO READ | Rajinikanth-இன் அண்ணாத்தே படபிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR