இந்த ஆண்டு தொடக்கத்தில் திரையரங்குகளை அடைய காத்திருந்த திரைப்படம் பொன்மகள் வந்தாள். ஆனால் கொரோனா முழு அடைப்பு காரணமாக இத்திரைப்படம் OTT தளங்களில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அலை எப்போது ஓயும், கடலில் எப்போது குளிப்பது என்று காத்திருக்காமல் படத்தின் தயாரிப்பாளர்கள் தற்போது இந்த முடிவுக்கு வந்துள்ளனர். மேலும் தயாரிப்புக்கு பின்னர் நேரடியாக ஆன்-லைன் தளங்களில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையினையும் இந்த திரைப்படம் பெற்றுள்ளது. இது நிச்சயமாக ஒரு சிறந்த நடவடிக்கை என்று கூறலாம். காரணம், காலம் வரும் என காத்திருக்காமல் அடுத்த கட்ட நகர்வை நோக்கி தயாரிப்பாளர் செல்ல வேண்டியது கட்டாயமாகிறது.
சரி., நாம் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை பற்றி பேசுவோம்... நீதிமன்றத்தில் நடைபெறும் ஒரு வழக்கை அடிப்படையாக கொண்டு திரைப்பட காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் நடைபெறும் ஒரு வழக்கு... இந்த வழக்கை சுற்றி நடைபெறும் கதைகள் என எல்லாம் சரியாக நடப்பது போலவே இருகிறது. இருப்பினும் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் - அதில் போதுமான பஞ்ச் இல்லை.
அதாவது ஒரு வழக்கு மீண்டும் வெளியாகும் விதம் இப்படி இருக்குமா? - கையில் எடுக்கப்படாத ஒரு வழக்கு பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்படுகிறது, மேலும் அதனை அடுத்து ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்வுகள் தொடர்கின்றன. .
கதையின் நாயகி ஜோதிகா வக்கீல் உடையில் ரசிகர்களை வியக்க வைக்கிறார். அவர் பெயர் இதில் வெண்பா. ஐந்து குழந்தைகளை கடத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஜோதி என்ற பெண்ணுக்காக வெண்பா போராடுகிறாள். இதில் பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. இது அவள் வசிக்கும் இடம் பற்றியது, மட்டும் அல்ல. அதாவது அவரது கலாச்சார அடையாளம். தென்னிந்தியர்களுக்கும் வட இந்தியர்களுக்கும் இடையில் ஒரு சுவர் உள்ளதை தெளிவாக காட்டுகிறது. இரு குழுக்களுக்கிடையில் நிலவும் ஒருவித அவநம்பிக்கை, அல்லது பகைமையாக கூட இருக்கலாம். முதலில் நினைவுக்கு வருவது மொழி. "சைக்கோ" ஜோதி (போலீசார் சொல்வது போல்), என்று அழைக்கப்படும் அந்த பெண் பிறந்த இடம் வசிக்கும் இடம் குறித்து நிறைய பேசப்படுகிறது.
இந்த படத்தின் ஆரம்ப காட்சிகள் மிகவும் அருமையாக இருக்கின்றன, ஏனெனில் அவை ரசிகர்களை முழுமையாக கவர்ந்து இழுக்கின்றன. மேலும், ஜோதி பற்றி பேசியது போதும். வெண்பா என்னும் ஜோதிகா பற்றி பார்ப்போம். ராஜரத்தினம் என்ற பாத்திரத்தில் ஆர் பார்த்திபன் நடித்துள்ளார். அவர் அதிகம் பேசாமலே, வெண்பாவுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறார்.
ராஜரத்தினம் ஒரு குற்றவியல் வழக்கறிஞர், நீண்ட கால அனுபவம் உள்ளவர். ஒரு கட்டத்தில், அவர் வழக்கறிஞர்களின் குடும்பத்திலிருந்து வந்தவர் என்று சொல்லிக் கொள்கிறார். அப்படியானால், வென்பாவுக்கு எதுதான் பலம்? உண்மை. உண்மைதான் அவள் பலம். சாட்சியங்களை சார்ந்து இருக்கும் இந்திய நீதிமன்றத்தில் அது மட்டும் போதுமானதா என்பதும் இதில் காட்டப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்து முக்கியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது. இது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் பற்றி பேசாமல் பேசுகிறது. இயக்குனர் ஜே.ஜே.பிரெட்ரிக் தனது எண்ணங்களை வெண்பாவின் வசனங்கள் மூலம் வெளிப்படுத்தி இருப்பது தெரிகிறது. .
கருத்து சொல்லும் திரைப்படங்களின் முக்கிய சிக்கல் என்னவென்றால், அவை ஆவணப்படங்களைப் பிரதிபலிக்கின்றன. எனவே, ஒரு முக்கிய கருத்தை சுற்றியுள்ள அனைத்து அலங்கார காட்சிகளும் பொருத்தமற்றதாகத் தோன்றுகின்றன - கே பாக்யராஜ் அறிமுகக் காட்சியையே கூறலாம். அங்கு ஒரு தேநீர் விற்பனையாளருக்கு எதிராக ஒரு வழக்கை தாக்கல் செய்கிறார். , நீதிபதி பிரதாப் போத்தன் மற்றும் அவரது நண்பர் பாண்டியராஜன் ஆகியோருடன், இரவில் மது அருந்திவிட்டு உரையாடுகிறார். இதற்கும் முக்கிய திரை கதை கருத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
தியாகராஜன், நீதிமன்ற அறையில் அவளை “அம்மா” என்று அழைக்கிறார், மேலும் அவர் ஆசாரம் குறித்து பேசும்போது பொறுமை இழக்கிறார். பெண்களை அம்மா என்று அழைப்பது வழக்கம் என்று சொல்கிறார். மேலும் வெண்பா ஆண்களை “வாடா, போடா” என்று அழைக்கலாம் என்று சொல்லும் காட்சி ஒரு தியேட்டரில் வெளியிடப்பட்டிருந்தால் விசில் பறக்கும் காட்சிகளை பார்த்திருக்கலாம். .
கடந்த ஆண்டு தெலுங்கில் நகைச்சுவை த்ரில்லர் திரைப்படம் ஒன்று வந்தது. அதில் இயக்குனர் தன் கருத்தைத் தெரிவிக்க தடுமாறவில்லை, இதேபோல், அசுரன் திரைப்படத்தில் ஒரு கருத்து இருந்தது - அது கல்வியின் முக்கியத்துவம் மற்றும் சாதி தடைகளை வீழ்த்துவது பற்றிய ஒரு நல்ல கருத்து.
பொன்மகள் வந்தாள் ஒரு நல்ல கருத்து சொல்ல வந்த படம் என்பதை மறுக்க முடியாது. ஜோதிகா வழக்கம் போல தன் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால் இயக்குனர் இன்னும் கொஞ்சம் கதாபாத்திரங்களின் முகமூடிகளை களைந்து காட்டி இருக்கலாம் என்று தோன்றுகிறது. வசனங்களில் மட்டும் நம்பிக்கை வைக்காமல் திரைக்கதையில் வேகம் கூட்டி இருக்கலாம். மற்றபடி இந்த திரைப்படத்தை ஒரு முறை பார்க்கலாம்.
மொழிபெயர்ப்பு - வானதி கிரிராஜ்.