பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் சுமார் 16 கோடி ரூபாய் பண மோசடி செய்யப்பட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது..? முழு விவரம் இதோ.
சென்னையை சேர்ந்த பாலாஜி கபா என்பவர், மாதவ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்திருந்தார். அதில், லிப்ரா புரொடக்ஷன் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்ற சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் அறிமுகம் தனக்கு 2020ஆம் ஆண்டு கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார். அப்போது சினிமா தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ரவீந்தர், நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்க உள்ளதாக தன்னிடம் கூறியதாகவும் அந்த திட்டத்தில் 200 கோடி வரை முதலீடு செய்தால் இரட்டிப்பாக லாபம் பார்க்கலாம் என தன்னிடம் ஆசை வார்த்தைகள் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, அந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஆவணங்களை தன்னிடம் அவர் காண்பித்ததாகவும் பாலாஜி கபா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். அவர் காண்பித்த ஆவணங்களை நம்பி தான் அத்திட்டத்தில் 16 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால், கூறியபடி அந்த திட்டம் தொடங்க படாததால் தன் பணத்தை அவர் திரும்ப கேட்டுள்ளார். ஆனால், அதற்கு ரவீந்தர் தனக்கு மிரட்டல் விடுத்ததாக தன் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | ‘சூர்யா 43’ படத்தின் நாயகி இவரா..? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
கைது:
இந்த புகார் குறித்து ஆராய்ந்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தினர். இதில், சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் தொடங்க இருப்பதாக போலியாக ஆவணங்களை தயாரித்து அதை வைத்து 16 கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து ரவீந்தர் மீது மோசடி மற்றும் போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அசோக் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ரவீந்தரை போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதற்கு முன்னர் அண்ணா நகரை சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியர் விஜய், தன்னிடம் ரவீந்தர் 20 லட்ச ரூபாய் பணத்தை ஏமாற்றியதாக புகார் கொடுத்திருந்தார். இது குறித்து ரவீந்தரிடம் போலீஸார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சனாதனம் என்பது எச்.ஐ.வி போன்றது-ஆ.ராசா பேச்சு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ