Kalki 2898 AD Movie Review : தெலுங்கு திரையுலகம் மட்டுமன்றி, தற்போது இந்திய அளவில் முன்னணி ஹீரோவாக வளர்ந்து நிற்பவர், பிரபாஸ். பெரிய பட்ஜெட் ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் அறியப்படும் இவர், சமீபத்தில் கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதன் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில், இப்படத்திற்கு சென்சார் போர்ட் அதிகாரிகள் விமர்சனத்தையும் சான்றிதழையும் வழங்கி இருக்கின்றனர்.
கல்கி 28998 ஏடி திரைப்படம்:
பிரம்மாண்டமான ‘ப்ராஜெக்ட் கே’ எனும் போஸ்டரால் ரசிகர்களின் கவனத்தை படம் இது. பின்னாளில் இதற்கு, கல்கி 2898 ஏடி என பெயர் வைக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக நடைப்பெற்றது. மகாநதி படத்தை இயக்கிய நாக் அஷ்வின், இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படங்களுள் இதுவும் ஒன்று. இதில், ஹீரோவாக பிரபாஸ் நடிக்க அவருடன் இணைந்து தீபிகா படுகோன், திஷா பதானி, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
மகாபாரத கதையில் ஆரம்பித்து, கலியுகம் என கூறப்படும் 2898ஆம் ஆண்டு வருடம் நிகழ்பவைகளை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் கல்கி 2898 ஏடி. இந்த படத்தில், பல்வேறு ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களும், கிராஃபிக்ஸ் பணியாளர்களும் வேலை பார்த்திருக்கின்றனர்.
சென்சார் குழு சான்றிதழ்:
கல்கி படத்தை, இந்திய திரைப்பட தணிக்கை குழுவினர் (சென்சார்) பார்த்தனர். படத்தின் சில காட்சிகள், ஹாலிவுட் அளவிற்கு இருப்பதாகவும், படத்தின் இறுதியில் அவர்கள் எழுந்து நின்று கைத்தட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்திய சினிமாவில் இதுவரை காணாத பல அம்சங்கள் இந்த படத்தில் இடம் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. படத்தின் கதையும் வித்தியாசமாக இருப்பதாகவும், பாக்ஸ் ஆஃபிஸில் அதிகம் வசூலை பெற இது உதவும் என்றும் திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
My closest source just returned from the censor screening of #Kalki2898AD [3D], and the censor board members were amazed by the spectacular visuals in the film, which easily match Hollywood standards and were really appreciated with a STANDING OVATION. These are visuals that have… pic.twitter.com/3FIwHYcOCT
— Mumbai Box-Office (@MumbaiBoxOffice) June 18, 2024
பிரபாஸ், பைரவா எனும் கதாப்பாத்திரத்தில் நன்றாக நடித்திருப்பதாகவும், அமிதாப் பச்சன் அஸ்வத்தாமா எனும் கதாப்பாத்திரத்தில் விளாசியுள்ளதாகவும் பேசப்படுகிறது. கமல்ஹாசனின் வில்லத்தனம் மற்றும் நடிப்பு அட்டகாசமாக இருக்கிறாதாம். படத்தின் பின்னணி இசை மட்டும் இன்னும் கொஞ்சம் மெருகேறி இருக்கலாம் என்றும், பாடல்கள் படத்திற்கு தடையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ஹாலிவுட் கலைஞரிடம் இருந்து திருடப்பட்டதா ‘கல்கி 2898 ஏடி’ காட்சி: சர்ச்சைப் பின்னணி
படத்தின் நீளம், கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு இருப்பதாகவும் பல எதிர்பார்க்காத பல தென்னிந்திய நடிகர்கள், கல்கி 2898 ஏடி படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரிலீஸ் எப்போது?
கல்கி 2898 ஏடி திரைப்படம், இம்மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான முன்பதிவு, ஆஸ்திரேலியாவில் தொடங்கியிருப்பதாகவும் அங்கு முதல் நாளிலேயே சுமார் 5,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டு 84 லட்சம் கலெக்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவரை வெளியான பிரபாஸ் படங்களுள், இப்படத்திற்கு பெரிய வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றி பெறுமா?
பிரபாஸ் நடிப்பில், பாகுபலி படத்திற்கு அடுத்து வெளியான அனைத்து படங்களும் திரையரங்குகளில் சரியாக செயல்படவில்லை. குறிப்பாக, கடந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஆதி புருஷ் படம், இந்திய அளவில் பெரும் தோல்வியை சந்தித்தது. அதே போல சலார் சீஸ் ஃபயர் பார்ட் 1 திரைப்படமும் தமிழகத்தில் தோல்வி அடைந்தது. பிரபாஸை வைத்து, கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுத்தாலும், கதை காரணமாக பல படங்கள் தோல்வி அடைந்திருக்கின்றன. இதனால், கல்கி திரைப்படம் வெற்றி பெறுமா-இல்லையா என்பதை, ரிலீஸ் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | கமலை காணோம்..கல்கி 2898 ஏடி பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ