‘விஜய்-68’ படத்தை இயக்கும் சிறுத்தை சிவா?!- ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் தகவல்!

நடிகர் விஜய்யின் 66ஆவது திரைப்படத்தை வம்சி இயக்கிவரும் நிலையில் அவரது 68ஆவது படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்க வாய்ப்புள்ளதாக புதிய தகவல் கசிந்துள்ளது.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jun 2, 2022, 02:28 PM IST
  • நடிகர் விஜய்யின் 66ஆவது திரைப்படத்தை வம்சி இயக்கிவருகிறார்
  • விஜய்யின் 67ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகத் தகவல்
  • விஜய்யின் 68 ஆவது படத்தை சிறுத்தை சிவா இயக்க வாய்ப்புள்ளதாக புதிய தகவல்
‘விஜய்-68’ படத்தை இயக்கும் சிறுத்தை சிவா?!- ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் தகவல்! title=

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கிவரும் படத்தில் நடித்துவருகிறார். ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இதில் விஜய்யுடன் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துவருகிறது.

விஜய்யின் 66ஆவது படமான இதைத் தொடர்ந்து 67ஆவது படத்தை லோகேஷ் கனகராஜே இயக்கவுள்ளாராம். மாஸ்டர் படத்துக்குப் பின்னர் மீண்டும் இணையவுள்ள இக்கூட்டணியின் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபில்ம்ஸ் நிறுவனம் தயாரிக்கப் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றனவாம். விக்ரம் படம் ரிலீஸ் ஆனதும் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இயக்குநர் சிறுத்தை சிவா நடிகர் விஜய் இடையே சந்திப்பு நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பின்போது இருவரும் தங்களது அடுத்தடுத்த திட்டங்கள் பற்றிப் பரஸ்பரம் பேசியதாகவும், சந்திப்பின் இறுதியில், தனக்கு ஒரு கதை தயார் செய்யுமாறு சிவாவிடம் விஜய் தெரிவித்ததாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இணையத்தில் வைரல் ஆகிவரும் இந்தத் தகவல் உறுதியாகும் பட்சத்தில் விஜய்யின் 68ஆவது படத்தை சிவா இயக்க வாய்ப்புள்ளது. விஜய் படத்தை இயக்கப் பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகக் கடந்த ஆண்டே சிவா தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான் இப்படியான ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | அஜித்தை அண்ணாமலையுடன் ஒப்பிட்ட பாஜக நிர்வாகி- வெடித்தது புதிய சர்ச்சை!

 

 அஜித்தை வைத்து 4 படங்கள் இயக்கிய சிவா அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளாராம். அதை முடித்த பின்னர்தான் விஜய்யுடன் இணைவார் எனச் சொல்லப்படுகிறது. அஜித்- சிவா எனும் கூட்டணி கடந்த சில ஆண்டுகளாக ட்ரெண்டிங்கில் இருந்துவந்த நிலையில் விஜய்- சிவா காம்போ எப்படி இருக்கப் போகிறது எனும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

மேலும் படிக்க | ஓடிடியிலும் உலகளவில் மிரட்டிய RRR- அப்படி என்ன சாதனைனு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News