பிரபல நடிகருக்கு தொடரும் கொலை மிரட்டல்... பாதுகாப்புக்கு வெளிநாட்டு கார் - என்ன ஸ்பெஷல்?

Salman Khan Bullet Proof Car: பிரபல பாலிவுட் நடிகருக்கு கேங்ஸ்டர் கும்பலிடம் இருந்து தொடர் கொலை மிரட்டல் வரும் நிலையில், வெளிநாட்டில் இருந்து கார் ஒன்றை சொந்த பாதுகாப்புக்காக அவர் இறக்குமதி செய்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 7, 2023, 10:30 PM IST
  • அந்த நடிகருக்கு காவலர்கள் பலத்த பாதுகாப்பை அளிக்கின்றனர்.
  • இருப்பினும், நடிகரும் சொந்த பாதுகாப்புக்கு பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.
பிரபல நடிகருக்கு தொடரும் கொலை மிரட்டல்... பாதுகாப்புக்கு வெளிநாட்டு கார் - என்ன ஸ்பெஷல்? title=

Salman Khan Bullet Proof Car: கடந்த சில மாதங்களாக, லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரின் கும்பலிடம் இருந்து சல்மான் கானுக்கு பல்வேறு கொலை மிரட்டல்கள் வந்தன. சல்மான் கானுக்கு தற்போது ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர் சொந்த பாதுகாப்பிற்காக தனது பங்கிற்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்.

பாதுகாப்பான கார்

அந்த வகையில், சல்மான் கான் விலை உயர்ந்த புல்லட் புரூப் காரை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புல்லட் புரூப் நிசான் பேட்ரோல் எஸ்யூவி (Nissan Patrol SUV Bullet Proof) வகையான சொகுசு வெள்ளை காரில் சல்மான் கான் அடிக்கடி பயணிப்பதைக் காண முடிகிறது. இந்த கார் இன்னும் இந்திய சந்தைகளில் கிடைக்கவில்லை என்றும் சல்மான் கான் இதனை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. 

இந்த கார் B6 அல்லது B7 அளவிலான பாதுகாப்புடன் வருகிறது. B6 ஆனது பாலிஸ்டிக் பாதுகாப்பிற்காக 41 மிமீ தடிமன் கொண்ட கண்ணாடியுடன் உயர்-சக்தி வாய்ந்த துப்பாக்கி தாக்குதலின்போது, கவசமாக செயல்பட்டு காரில் இருப்பவர்களை காப்பாற்றுக்கிறது. அதே நேரத்தில் B7, 78 மிமீ தடிமன் கொண்ட கண்ணாடி மூலம், புல்லட் துளையிட முடியாதவாறு பயணிகளை பாதுகாக்கிறது. 

மேலும் படிக்க | இந்தியன் 2 ஷூட்டிங்..மாஸ் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர் ஷங்கர்

இந்த கார் இப்போது சல்மான் கானின் முந்தைய டொயோட்டா லேண்ட் குரூசர் LC200 ஐ மாற்றாக கொண்டுவரப்பட்டது என்று கூறப்படுகிறது, இது கவசம் மற்றும் குண்டு துளைக்காத கண்ணாடியுடன் மாற்றியமைக்கப்பட்டது.

கடந்த மாதம், சல்மான் கானுக்கு கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் உதவியாளர் கோல்டி பிராரிடம் இருந்து மிரட்டல் கடிதம் வந்தது. ஒரு பேட்டியில் "சல்மான் கானைக் கொல்வதே தனது வாழ்க்கையின் குறிக்கோள்" என்று கேங்க்ஸ்டர் கூறிய சில நாட்களுக்குப் பிறகு சல்மானின் தனிப்பட்ட உதவியாளர் ஜோர்டி படேலுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.

நண்பர் அளித்த புகார்

சல்மான் கானின் நெருங்கிய நண்பரான பிரசாந்த் குஞ்சல்கர், ஜோர்டி படேலின் அலுவலகத்திற்குச் சென்றபோது அவரது இன்பாக்ஸில் மிரட்டல் மின்னஞ்சலைப் பார்த்ததாகக் கூறி, பாந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

குஞ்சல்கர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். "நான் சல்மானின் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் அடிக்கடி சென்று வருகிறேன். நான் அவரது அலுவலகத்தில் இருந்தபோது, படேலின் இன்பாக்ஸில் மிரட்டல் கடிதத்தைப் பார்த்தேன். கோல்டி பாயிடம் (கோல்டி ப்ரார்) இருந்து மிரட்டல் கடிதம் வந்தது.  கேங்ஸ்டர் பிஷ்னோய், அவரது உதவியாளர் கோல்டி ப்ரார் மற்றும் மெயில் அனுப்பிய ரோஹித் கார்க் ஆகியோருக்கு எதிராக காவல்துறையினரால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

மானை வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான் சிக்கியதில் இருந்து லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது உதவியாளர்கள், சல்மான் கானை கொல்ல சதித்திட்டம் தீட்டி வருகின்றனர். 

மேலும் படிக்க | விடுதலை படத்தில் ஆயிரம் குறைகள் உள்ளன... வெற்றிமாறன் கூறும் உண்மை என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News