"பொய் வாழ விடாது, உண்மை சாக விடாது”- விவேகானந்தரின் சில வரிகள் !

விவேகானந்தரின் சொற்பொழிவுகள் அனைத்தும் வாழ்க்கைக்கு அர்த்தமுள்ளதாய் அமையும், சுவாமி விவேகானந்தர் கூறிய வரிகள் ஒரு மனிதன் வாழ்க்கையில் என்னவெல்லம் கடைப்பிடிக்க வேண்டும். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று விவேகானந்தர் கூறிய வரிகள் இங்குப் பார்போம்.

1 /8

பொய் சொல்லித்தப்பிகாதே உண்மையை சொல்லி மாட்டிகொள் என்று சொன்னது சிவாமி விவேகானந்தர். உலகம் முழுவதும் சுவாமி விவேகானந்தரை  தெரியும். அவரின் சொற்பொழுவுகள் கேட்பதற்கு இனிமையாகவும்,அர்த்தமுள்ளதாகவும் அமையும்

2 /8

உன்மீது உனக்கே நம்பிக்கை இல்லையென்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை. எதையும் சாதிக்க முடியும் என்று நம்புங்கள் இறைவன் நமது பக்கம் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள் - சுவாமி விவேகானந்தர்

3 /8

யார் உங்களுக்கு உதவுகிறார்களோ,அவர்களை மறந்துவிடாதீர்கள். யார் உங்களை நேசிக்கிறாகளோ, அவர்களை வெறுத்து விடாதீர்கள்.யார் உங்களை நம்புகிறார்களோ அவர்களை ஒருபோதும் ஏமாற்றி விடாதீர்கள் - சுவாமி விவேகானந்தர்.

4 /8

அறிவு, உள்ளம் இரண்டிலும் எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழும்போது உள்ளம் சொல்வதையே நீங்கள் பின்பற்றுங்கள். இதயம் சொல்வதை செய், தோல்வியோ வெற்றியோ அதை தாங்கும் சக்தி அதனிடமே உள்ளது - சுவாமி விவேகானந்தர்.

5 /8

கோழையோ முட்டாளோ என்விதி என்பான், ஆனால் ஆற்றல் மிக்கவன் என் விதி நானே வகுப்பேன் என்பான். உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் உண்மையைத் துறக்காதே - சுவாமி விவேகானந்தர்.

6 /8

கஷ்டத்தை நீ நன்கு கவனித்துப் பார், அதில் துணிச்சல் தெரியும், அதைப் புரிந்துக்கொண்டால் துணிச்சல் என்பது நீ அணியும் ஆடையாக உன்னை அலங்கரிக்கும் - சுவாமி விவேகானந்தர்.

7 /8

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று  நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்- சிவாமி விவேகானந்தர்.  

8 /8

உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே, நீ சாதிக்கப் பிறந்தவன், துணிந்து நில், எதையும் வெல். நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தைப் பார், ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை - சுவாமி விவேகானந்தர்.