எடை இழப்பு பற்றி நாம் பேசுகையில் ஆண்களை விட பெண்களுக்கு மிகவும் கடினமாகி விடுகிறது. பெண்கள் உடல் எடையை குறைப்பது கடினம் என்பதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளது. ஏனெனில் ஆண்களை விட பெண்களுக்கு குறைவான தசை உள்ளது, அவர்களின் கலோரி உட்கொள்ளல் ஆண்களை விட வேறுபட்டது மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை தொடர்பான சில சிக்கல்களும் உள்ளன, இதனால் பெண்களின் எடை இழப்பு பயணம் கடினம் என்று கூறப்படுகிறது. மேலும் பெண்கள் கடுமையான உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவை உட்கொள்வதான் மூலம் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்யலாம். ஆனால் இதற்கு நாம் சரியான நேரம் கொடுக்க முடியாமல் போய்விடுகிறது. எனவே இவை இல்லாமல் எப்படி உடல் எடையை குறைக்கலாம் என்பதை இந்த பதிவில் ஆம் காண்போம்.
முழுமையான உணவை உட்கொள்ளுங்கள்:
உடல் எடையை குறைக்க வேண்டுமானால் அதற்கு எடுத்துக் கொள்ளும் உணவு முழு உணவாக இருக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் தங்களுடைய டயட்டில் முழு உணவுகளை எடுத்துக் கொள்ளவது மிகவும் அவசியமாகும். உதாரணமாக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், போன்ற உணவுகளை தினமும் முழுமையான அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் ரீஃபைண்ட் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
புரத உணவுகளை உட்கொள்ளுங்கள்:
உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும்போது புரத உணவுகளை அதிக எடுத்துக்கொள்வது நல்லது. அதிக புரத உணவு உங்கள் வயிற்றை விரைவாக நிரப்புகிறது, இது பசியைக் குறைக்கும் ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் இயல்பாகவே பசியைக் குறைப்பதால், உண்ணும் உணவின் அளவு குறையும், இதனால் உடல் எடை குறையத் தொடங்கும்.
முழுமயான தூக்கம்:
போதிய அளவு தூக்கம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். போதிய அளவு தூங்காதபோது உடலில் கெர்லின் என்னும் ஹார்மோன் சுரக்கும். இது பசியை தூண்டும். இதை தவிர்க்க இரவு குறைந்தது 8 முதல் 10 மணி நேரம் கட்டாயமாகத் தூங்க வேண்டும்.
தினம் உடற்பயிற்சி செய்தல்:
சிலர் ஒரே இடத்தில் நாள் முழுக்க உட்கார்ந்த படி இருப்பவார்கள். அவர்களின் வேலை இதற்கு முக்கிய காரணமாகும். இதனால உடல் எடை அதிகரிப்பது மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். எனவே உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் போதிய அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
நாள் முழுவதும் நீர்ச்சத்துடன் இருங்கள்:
உடல் எடை குறைக்க மிக முக்கிய விஷயங்களில் ஒன்று நாள் முழுவதும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது. இப்படி நாள் முழுக்க போதிய அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் உணவின் மீதான கிரேவிங்கை இது குறைக்கும். உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஒரு வாரத்தில் சருமம் பளபளக்க வேண்டுமா? இதை செய்யுங்கள் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ