மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றும் வாகன ஓட்டிகளை பாராட்டும் காவல் துறை!!

போக்குவரத்து விதிகளை விடாமுயற்சியுடன் பின்பற்றும் வாகன ஓட்டிகளை அங்கீகரித்து நன்றி தெரிவிக்கும் குருகிராம் காவல்துறையினர்!!

Last Updated : Sep 15, 2019, 07:06 PM IST
மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றும் வாகன ஓட்டிகளை பாராட்டும் காவல் துறை!!  title=

போக்குவரத்து விதிகளை விடாமுயற்சியுடன் பின்பற்றும் வாகன ஓட்டிகளை அங்கீகரித்து நன்றி தெரிவிக்கும் குருகிராம் காவல்துறையினர்!!

மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் கீழ் புதிய அபராத விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், புதிய மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் 5 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதற்கு பலரும் தங்களின் அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர். போலீசார் அபராதத் தொகையை வசூலிப்பதை பாதி குறைத்துக் கொண்டால்கூட அது வருமான வரி, GST வசூலையும் தாண்டியிருக்கும் என்று பலரும் டிவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

அதே வேளையில், போக்குவரத்து விதிகளை விடாமுயற்சியுடன் பின்பற்றும் வாகன ஓட்டிகளை அங்கீகரித்து நன்றி தெரிவிக்கும் ஒரு பிரச்சாரத்தை குருகிராம் காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். இதற்க்கு, 'ஸ்மைலி பிரச்சாரம்' என்று பெயர் வைத்துள்ளனர்.  போக்குவரத்து விதிகளை பின்பற்றும் வாகன ஓட்டிகளை 'புன்னகை ஈமோஜி' மூலம் பாராட்டி வருகிறார்கள். இது அவர்களுக்கு நன்றி சொல்லும் வழி. போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதில் அவர்கள் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்க வேண்டும் என்பதை வாகன ஓட்டிகளுக்கு நினைவூட்டும் செய்தியுடன் ஈமோஜி பிரச்சரத்தை தொடங்கியுள்ளது. இந்த பிரச்சாரத்தை DGP டிராஃபிக் ஹிமான்ஷு கார்க் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் கேலரியா சந்தையில் தொடக்கி வைத்தார். 

போக்குவரத்து விதிகளை மீறிய குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்ட நபர்களும் 'சோகமான ஈமோஜிகளுடன்' குருகிராம் காவல்துறை அவர்களுடன் மகிழ்ச்சியடையவில்லை என்று ஒரு செய்தியுடன் வழங்கப்பட்டது. அனைத்து வாகன ஓட்டிகளும் - பின்வரும் விதிகளை வைத்திருந்தாலும் இல்லாவிட்டாலும் - தங்கள் சொந்த பாதுகாப்புக்காகவும், சாலையில் உள்ள மற்றவர்களின் பாதுகாப்பிற்காகவும் எப்போதும் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதற்கான நினைவூட்டலாக ஈமோஜிகளை வைத்திருக்குமாறு கோரப்பட்டது. 

 

Trending News