புது தில்லி: ஒருவரைக் கொன்ற பிறகு, வில்லன் அவரது கட்டைவிரல் பதிவை சொத்து பத்திரங்களில் எடுப்பதை நீங்கள் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் இது சாத்தியமல்ல என்கின்றனர் அறிவியல் வல்லுநர்கள் தற்போது கைரேகைகள் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆதார் அட்டை, வங்கி KYC ஆகியவற்றுக்கு மட்டுமல்லாது, மொபைலை ஆன் செய்வதற்கு கூட கைரேகை பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் இறந்துவிட்டால், அவரது கைரேகைகள் எவ்வளவு காலம் வேலை செய்யும்? அறிவியல் கூறுவது என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஒரு நபர் இறந்த பிறகு, ஆக்ஸிஜன் சப்ளை இல்லாததால் மெல்ல, மெல்ல உடல் செல்கள் இறக்க ஆரம்பிக்கும். அதனால் கைரேகைகள் மாறும் என நிபுணர்கள் கூறுகின்றனர் . மரணத்திற்குப் கைரேகைகள் மாறுவதோடு மட்டுமல்லாமல், மங்கலாகவும் தெளிவற்றதாகவும் இருக்கும். நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸின் ஜூலை 14, 2015 பதிப்பில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கைரேகை பதிவுகள் எடுக்கப்பட்டத்தற்கு இடையேயான நேர இடைவெளி அதிகரிக்கும்போது கைரேகை அங்கீகாரத்தின் நம்பகத்தன்மை குறைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ALSO READ | பகீர் சம்பவம்! கழிப்பறைக்கு சென்ற நபரின் அந்தரங்க பகுதியை கடித்த பாம்பு..!!
ஒருவன் இறந்த பிறகு அவனது உடல் நெகிழ்வு தனமையை இழப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இறந்த பிறகு மற்ற உறுப்புகளைப் போல் அவரது விரல்களும் விரைத்துக் கொள்ளும். இதனால் அவர்களின் கைரேகை எடுப்பது எளிதல்ல. விஞ்ஞானம் இதற்கான பிரத்யேக உபகரணங்களை உருவாக்கியுள்ளது. கைரேகைகளை ஒரு சிறப்பு வளைந்த சாதனத்தைப் பயன்படுத்தி மட்டுமே எடுக்கலாம்.
ஒருவர் இறந்து நீண்ட நாட்களாகிவிட்டாலோ அல்லது உடல் சிதைந்திருந்தாலோ அவரது கைரேகையை எடுப்பது மிகவும் கடினம். அத்தகைய நபரின் கைரேகைகளை நவீன ஆய்வகங்களில் உள்ள தடயவியல் நிபுணர்களால் மட்டுமே எடுக்க முடியும். சில நேரங்களில் அதற்கு நீண்ட நேரம் ஆகலாம்.
இறந்த நபர்களின் கைரேகையை அறிய முடியாது என்றாலும், அதே நபர் உயிருடன் இருந்த போது மற்றும் இறந்த பிறகு எடுக்கப்பட்ட கைரேகையில் ஒரு சிறப்பு வகையான சமச்சீர்நிலை உள்ளது. சில சமயங்களில் கைரேகை மூலம் இறந்தவரின் அடையாளமும் கண்டறியப்படுகிறது.
தற்போது ஒவ்வொரு மொபைல் போனிலும் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. ஒருவர் இறந்த பிறகு, மொபைலின் இந்த கைரேகை சென்சார் வேலை செய்யாது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். மொபைலில் பயன்படுத்தப்படும் கைரேகை சென்சார் தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்டது, அது இறந்தவருக்கும் உயிருள்ளவருக்கும் இடையிலான வித்தியாசத்தை உடனடியாகப் கண்டு பிடிக்கிறது. இறந்தவரின் விரலை கொண்டு அவரது சொந்த மொபைலின் சென்சாரில் தொட்டால் கூட, அதனை திறக்க முடியாது.
ALSO READ | Viral Video: அவரு தோளுல தொங்குறது துண்டு இல்ல, மலைப்பாம்பு: மலைக்க வைக்கும் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR