மேஷ ராசியில் ராகுவின் ராசி மாற்றம்: ஜோதிடத்தின் படி, கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் கிரகம் சனி பகவான். சனிக்குப் பிறகு மெதுவாக நகரும் கிரகங்கள் ராகு மற்றும் கேது ஆகும்.
இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றரை வருடத்தில் ராசியை மாற்றுகின்றன. இது தவிர, இவை எப்போதும் தலைகீழ் இயக்கத்தில் செல்வது மற்றொரு சிறப்பாகும். ஏப்ரல் மாதத்தில் ராகு கிரகம் மேஷ ராசியில் பிரவேசித்துள்ளது.
ராகு மற்றும் கேது நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒருவரது ராசியில் ராகு கேதுவின் அசுப பலன்கள் இருந்தால், அதனால், வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படும். எனினும், இந்த இரு கிரகங்களும் பல சுப பலன்களையும் அளிக்கின்றன.
ராகுவின் ராசி மாற்றமும் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான நேரத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும். ராகுவின் அருளால் 1 வருடத்திற்கு மேல் மகத்தான பலன்கள் கிடைக்கப்போகும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இவர்களுக்கு ராகுவின் ராசி மாற்றம் மிகவும் சாதகமாக இருக்கும்
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு ராகுவின் ராசி மாற்றம் பல வரங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த நேரம் அவர்களுக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் பெரிய ஊக்கத்தை அளிக்கும். அவர்களின் வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும்.
மிதுன ரசிக்காரர்களுக்கு பணம் ஈட்டுவதற்கான பல புதிய வழிகள் திறக்கப்படும். குறிப்பாக வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த நேரம் பொன் மழையாக அமையும். அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பெரிய பதவி கிடைக்கும்.
மேலும் படிக்க | சிம்ம ராசிக்கு சிங்க பலத்தை தரும் நட்புகள்: இன்றைய ராசிபலன்
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு வேலை விஷயத்தில் ராகுவின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய பதவி கிடைக்கும். ஊதிய உயர்வும் கிடைக்க வாய்புள்ளது. நீண்ட நாட்களாக வேலை தேடியவர்களுக்கு புதிய வேலை கிடைக்கலாம்.
சொந்த தொழில் செய்பவர்களுக்கும் ராகுவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். வியாபாரிகள் அதிக லாபம் பெறலாம். முதலீடு சாதகமாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் தற்போது அமையும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் செல்வப் பலன்களையும் தரும். நீண்ட பயணங்களையும் மேற்கொள்ளலாம். இந்த பயணங்கள் பல வித ஆதாயங்களை தரும் வகையில் அமையும், பணியிடத்தில் பெரிய முன்னேற்றம் காண்பார்கள்.
மீன ராசிக்காரரகளின் வருமானம் அதிகரிக்கும். அரசியலில் பிரவேசிக்க விரும்புபவர்கள் அல்லது பெரிய பதவியைப் பெற விரும்புபவர்களின் கனவு நனவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் / மனைவி, குழந்தைகளால் மனம் மகிழும். நல்ல செய்திகள் பல வரும். மொத்தத்தில், இந்த நேரம் அனைத்து வகையிலும் மீன ராசிக்காரர்களுக்கு பல நல்ல பலன்களைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 2025 வரை ஏழரை நாட்டு சனியின் கிடுக்கிப்பிடியில் சிக்கித் தவிக்கப் போகும் ராசி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR