2020 ஆம் ஆண்டில் பாடாத பாடு பட்டாச்சு, இனி இந்த புத்தாண்டாவது சிறந்த ஆண்டாக இருக்கட்டும் என்பது தான் பல்வேறு மக்களின் மன ஓட்டமாக இருந்து வருகிறது.
ஆனால், 2020 ஆம் ஆண்டு வெறும் ட்ரையலர் தான், மெயின் பிக்சர் இனிமேல் தான் என்கிறார் ஒரு பிரெஞ்சு தத்துவஞானி, தீர்க்கதரிசி, நோஸ்ராடாமஸ் (Nostradamus) 2021 ஆம் ஆண்டில் ஜோம்பிஸ், பஞ்சம் மற்றும் சிறுகோள்கள் உலகை தாக்கும் என அவர் கணித்துள்ளார்.
மைக்கேல் டி நோஸ்ட்ராடாமஸ் என்னும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தத்துவஞானியின் கணிப்புகள் கடந்த காலத்தில் உண்மையாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது பல கணிப்புகள் உண்மையாகியுள்ளதால், ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டிருந்தாலும், அவரது புத்தகம் இன்னும் பிரபலமாக உள்ளது.
ஹிட்லரின் எழுச்சி, இரண்டாம் உலகப் போர் (II World War) போன்ற அவரது கணிப்புகள் ஏற்கனவே கடந்த காலங்களில் உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன. இப்போது 2021 ஆம் ஆண்டு 2020 ஐ விட பேரழிவை ஏற்படுத்தலாம் என கூறியுள்ள அவரது கணிப்புகள் பலரை கவலையில் ஆழ்த்தியுள்ளன.
2021 ஆம் ஆண்டிற்கான நோஸ்ட்ராடாமஸ் கூறியுள்ள சில கணிப்புகள்:
ஜாம்பி (zombie) தாக்கி பேரழிவு ஏற்படும்: புத்தகத்தில், பாதி இறந்த சில இளைஞர்களைப் பற்றி, அதாவது ஜாப்பி பற்றி அவர் எழுதியுள்ளார். இந்த ஆண்டு ஜாம்பி தாக்குதல் நடக்கலாம் எனவும், ஒரு ரஷ்ய விஞ்ஞானி தாயரித்த ஒரு உயிரியல் ஆயுதம் உலகை அழித்துவிடும் என்கிறார். ஒரு திகில் பட ஸ்கிரிப்ட் போல் தெரிகிறது, இல்லையா?
பஞ்சம்: ‘மனிதகுலத்திற்கு பெரும் கஷ்டத்தை கொடுக்கும் எனவும் ‘மழை, இரத்தம், பால், பஞ்சம், மற்றும் தொற்று’ ஆகியவை காரணமாக அழிவுகள் உண்டாகும் எனவும் கணித்துள்ளார். கொரோனா வைரஸை (Corona Virus) விட பயங்கரமான நோய்கள் அடுத்த ஆண்டு தாக்கக் கூடும் என்றும் இது எச்சரிக்கிறது.
உலகளாவிய தொற்றுநோய் பல லட்சம் அமெரிக்கர்களை உணவுக்காக கை ஏந்தும் நிலையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2021 ஆம் ஆண்டில் உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினைகள் ஏற்படலாம் என ஐ.நா(UN) எச்சரித்துள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிறுகோள் தாக்குதல்: நோஸ்ட்ராடாமஸ் வானத்தில் ’a long trail of sparks’, அதாவது ‘தீப்பொறிகளின் நீண்ட பாதை’ பற்றி எழுதுகிறார். ஒரு பெரிய சிறுகோள் பூமியைத் தாக்கக்கூடும் என்பது இதன் பொருள். அடுத்த சில ஆண்டுகளில் சிறுகோள்கள் பூமியைத் தாக்கும் என்று நாசா ஏற்கனவே கணித்துள்ளது. கிரிஸ்மஸ் சமயத்தில், இந்த ஆண்டு, ஒரு சிறுகோள் பூமியைக் கடந்து பறந்தது, ஆனால் வரவிருக்கும் காலத்தில், இது மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று தெரிகிறது.
ALSO READ | பிடிவாதம் பிடிக்கும் டிரம்ப்.. வீட்டோ அதிகார முடிவை நிராகரித்த நாடாளுமன்றம்..!!
ஒரு பூகம்பம் கலிஃபோர்னியாவை உலுக்கும்: ஒரு பேரழிவு ஏற்படுத்தும் பூகம்பம் 'மேற்ககு நிலத்தை' தாக்கும் என கணித்துள்ளார். அது கலிபோர்னியாவாக இருக்கலாம்.
வல்லுநர்கள் நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகளை, தெளிவற்ற நம்ப முடியாத கணிப்புகள் என நிராகரிக்கிறார்கள். ஆனால் கடந்த ஆண்டின் கசப்பான அனுபவங்கள், நமக்கு இந்த கணிப்புகள் திகிலான உணர்வை தருகின்றன.
ஆனால், அதே சமயத்தில் நல்லதே நினைத்து, சவால்களை எதிர் கொள்ள தயாராவோம்.
ALSO READ | இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் அணுநிலையங்கள் பட்டியலை பரிமாறிக் கொண்டன
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR