டிப்ளமோ முடித்திருந்தால் போதும் நிதி அமைச்சகத்தில் வேலை - முழு விவரம்

டிப்ளமோ முடித்தவர்கள் நிதி அமைச்சகத்தில் வேலை செய்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 3, 2022, 06:03 AM IST
  • மத்திய நிதியமைச்சகத்தில் வேலை வாய்ப்பு
  • டிப்ளமோ முடித்திருந்தால் போதும்
  • விண்ணப்பிப்பதற்கு செப்டம்பர் 20ஆம் தேதி கடைசி நாள்
டிப்ளமோ முடித்திருந்தால் போதும் நிதி அமைச்சகத்தில் வேலை - முழு விவரம் title=

நிதி அமைச்சகமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Cameraman பதவிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Cameraman பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

மேலும் படிக்க | இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு - 100க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / மருத்துவ பரிசோதனை மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் https://drive.google.com/file/d/1_FJ3Jyhnae0m8zpdPE4pwR652eFhT2zg/view என்ற தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறார்கள். 20.09.2022ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

மேலும் படிக்க | EV vs Battery: அக்டோபர் முதல் புதிய பேட்டரி விதிகள் அமலுக்கு வருகின்றன

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

Trending News